Tuesday, November 13, 2012

I am back...Billa 3

Saturday, November 5, 2011

கொஞ்சம் யோசியுங்கள்....

பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள்.
ஆண்கள் அழுகிறார்கள்... 

Friday, November 4, 2011

சினிமா

சினிமாவை எல்லோருக்கும் தெரியும். ஆனால் சினிமாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியாது. அது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிக வலிமையான தொடர்பாடல் ஊடகம். மற்ற எந்த இலத்திரனியல் ஊடகத்தையும் விட சக்தி வாய்ந்தது.

அது மிகச் சிறந்த பொழுதுபோக்கி மட்டுமல்ல; வெகுசன அபிப்பிராயங்களை உருவாக்ககூடிய அல்லது திணிக்கக்கூடிய ஒரு ஊடகம். அதன் வீச்சினை அல்லது அதன் மூலம் பெறக்கூடிய நன்மையின் அளவினை நாம் குறைத்துத்தான்   மதிப்பிட்டிருக்கிறோம்.

மற்றக் கலைகளை விட சினிமா மனிதனின் அனைத்து புலன்களையும் தூண்டி ஒரு செய்தியின் தாக்கத்தினை முழுமையான அளவில் உணர வைக்கும். நிஜ வாழ்வில் கூட உணரத்தவறும் சில உணர்வுகளை சிறப்பாக உணரவைப்பதில் சினிமா கைதேர்ந்தது. ஒரு சோகமான தருணத்தில் யாரும் நம் பின்னால் நின்றுகொண்டு சோக கீதம் படிப்பதில்லை. காதலை காதலி ஏற்றுக் கொள்ளும்போது லாலாலா... கோரசுடன் பட்டாம்பூச்சிகள் பறப்பதில்லை. இருட்டில்  தனியே 
வீடு திரும்பும்போது எதுவித பயங்கர  பின்னணி இசை ஒலிப்பதில்லை. 

எந்த ஒரு சிறப்பான கதையிலும் காட்சி விபரிப்பு அவ்வளவு சிறப்பாக முழுமையாக  வாசகனை  சென்றடைவதில்லை.   ஒரு  எழுத்தாளனின்  கதையில்  வரும்  மாந்தர்களினை 
சூழலை  அல்லது பின்னணியை வாசகன்  தான் இதுவரை பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தின் ஊடாகவே கற்பனை செய்துகொள்கிறான்.எழுத்தாளனின் மொழிநடை, சொற்கள்
ஆகியன வாசகனுக்கு புரியாமல் போகலாம். ஆனால் சினிமாவில் இயக்குனர் தான் உணர்ந்ததை அல்லது காட்ட விரும்புவதை கிட்டத்தட்ட முழுமையாக உணர்த்திவிடலாம். 

அத்துடன் தற்போதைய விஞ்ஞான தொழிநுட்பத்தின் மூலம் தகவலை உணர்த்தும் கலைக்கு வரையறைகளே இல்லாமல் போய்விட்டது எனலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்.  மனித உணர்வுகளின் நுணுக்கங்கள்,ஆவிகளின் நடமாட்டங்கள்,
மந்திரவாதிகளின் மந்திரக்கோல்கள், மற்றவரின் கனவுகள்,விண்வெளியில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் இன்னும் சொல்லப்போனால் இறந்த காலம்,எதிர்காலம் என அனைத்தையுமே காணலாம். 
கற்பனைகளை காட்சிகளாய் காணமுடிவது சினிமாவில்தான்.

ஆனால் இங்கே சினிமா என்றால் கிட்டத்தட்ட ஒரு கெட்ட சொல் போல பார்க்கப்படுகிறது. நான் கத்தியும் சினிமாவும்  
ஒன்றென்பேன். அதை  நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் அது நல்லதா கெட்டதா என்பது அடங்கியிருக்கிறது. ஓர் ஆளைக் குத்தி கொலையும் செய்யலாம் அல்லது அந்தாலயுக்கு மரக்கறி 
வெட்டி சமையலும் செய்யலாம். 
சினிமாவில் இரண்டு பகுதியினர் உள்ளனர். சினிமா தயாரிப்பவர்கள் மற்றும் சினிமா பார்ப்பவர்கள். இவ்விருவரின் செயற்பாடும் சரியாக இருக்கவேண்டும். முதலாமவர்கள் சினிமாவை காசு சம்பாதிக்கும் தொழிலாக பாவிக்க நினைத்தால் நீலப்படம் எடுக்கலாம். இரண்டாமவர்கள் சினிமா தரும் கற்பனை உலகிலேயே லயித்து நிஜ உலகை மறந்து அல்லது அதனை கெடுத்துக் கொண்டு வாழலாம். இந்த இரண்டு பேரின் மனிதப் பலவீனத்தினால் உண்டான தவறுகளுக்காக எடிசன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதத்தை குறை சொன்னால் எப்படி?
   
சரி, சினிமா எப்படி இவ்வளவு பேரை கவர்கின்றது?  மனிதன் ஒரு கதை விரும்பி. மனிதன் பூமியில் பிறந்தது முதல் கதை சொல்வதிலும் கேட்பதிலும் அவனுக்கு ஈடுபாடு அதிகம்.உரை அல்லது கட்டுரை வடிவம்வருவதற்கு முன்பு கதைகள் மூலமே மக்களுக்கு 
ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன.கதைகள் சொல்லியே இறைதூதர்கள் மதங்களை உருவாக்கினார்கள். அதற்கு கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர் 
சரியான உதாரணம். கதையின் பிரமாண்ட வடிவங்களே புராணங்கள், காப்பியங்கள் போன்றன. எவனும் அறிவுரை சொன்னால் கேட்கமாட்டான். கதை சொன்னால் இருந்து கேட்பான். அதனால் கதைகள் ஊடாக அறிவுரை சொன்னார்கள்.

பின் கதைகள் கூத்தாக நாடகமாக இசை சேர்த்து கூறப்பட்டது. இப்போது கதை சொல்பவர்களுக்கு தன் கதையின் முழுமையையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கூறுவதற்கு சினிமா வந்துவிட்டது.


நம்மவர்கள் சினிமாவை கலைப்படங்கள், வர்த்தகப்படங்கள் எனப் பிரிப்பார்கள். அது தவறு. எந்த ஒரு வர்த்தகப் படமும்
நான்கு சண்டை மற்றும் பாடல்கள் இருந்தால் மட்டும் ஓடிவிடாது. அதுபோல மிக மெதுவாக nakarkinra கதையும் கதையில் உண்மையின்மையும் அதனை அழகாக வெளிப்படுத்தாத தன்மையும்
கொண்டிருந்தால் எந்த ஒரு கலைப்படமும் பாராட்டுப் பெறாது. சினிமா என்பது மக்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டுமாயின் அது அவர்களை எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். கதை
அவர்களது சொந்த வாழ்க்கையில் நடப்பது போன்று இருக்கலாம் அல்லது நடக்கவேண்டும் என ஆசைப்பட்டது போல இருக்கலாம். அப்போதுதான் அது அவர்களுக்குப் பிடிக்கும்.


மனிதனுக்கு பலவிதமான உளவியல் தேவைகள் இருக்கின்றன. அவனது உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் வேண்டும். அவனுக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அவன் அழவேண்டும். சிரிக்கவேண்டும். கோபப்பட வேண்டும். பயப்பட வேண்டும். காமுறவேண்டும். இல்லாவிடில் பைத்தியம் பிடித்துவிடும். உணர்ச்சிகளை உணர்ச்சிகளை காட்டாமல் அடக்கியே வைத்திருப்பவர்களுக்கு அது எக்குத்தப்பான இடத்தில்  வெளிப்பட்டுவிடும்.


நிஜ சமுதாயத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எங்கே சிரிக்க வேண்டும்; எங்கே அழ வேண்டும்;யார்மீது கோபத்தை காட்ட வேண்டும்; யார்மீது காமுற வேண்டும் என ஆயிரத்தெட்டு வரைமுறைகள். அது அவனது மனத்திற்கு தெரியும். ஆனால் உடல் அறியாது. பசி வந்தால் அது பசித்தே ஆகும். இயற்கை அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா?


ஒரு சினிமாவைப் பார்க்கும்போது அயலவனுக்கு சேதமில்லாமல் இவற்றிற்கு தீர்வு கிடைத்துவிடுகிறது. நல்லவர்களுக்கு தீங்கு நேர்ந்தாலும் பிற்பகுதியில் கேட்டவர்கள் அழியவேண்டும். என்பது    
எல்லோரதும் அவா. அது சினிமாவில் நடக்கிறது. ரஜினி, எம். ஜி.ஆர் படங்கள் ஜெயிக்கின்றன. தாங்க பட்ட வாழ்க்கைத் துன்பங்களை. சிவாஜி, கமல் போன்றோர் வெளிப்படுத்துகையில் அச்சினிமாவுடன் அவர்கள் ஒன்றிப் போய்விட முடிகிறது. வானத்தில் பறக்க வேண்டும், நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் போன்ற சாகச ஆசைகள் சினிமாவில் நாம் விரும்பும் ஹீரோவினால் அல்லது கதையினால் தீர்க்கப்படுகின்றன.

பொதுவாக இன்னொரு குற்றச்சாட்டும் உண்டு. ஆங்கிலப் படங்கள் போன்ற பிறமொழிப் படங்களுடன் தமிழ்ப்படங்களை ஒப்பிட்டு அவை போல இல்லை என்பார்கள். அப்படி இருக்கக் கூடாது என்பதுதான் சரியானது. ஆங்கிலப் படங்கள் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் படத்தில் தமிழர்கள் ஆங்கிலம் அல்லவே பேசவேண்டும்? பிற மொழி அல்லது ஆங்கிலப் படங்களில் தங்கள் கலாச்சாரம், பண்பாடு, தனித்தன்மை இவற்றை வெளிப்படுத்தித்தான்  எடுப்பார்கள். அப்படித்தான் எடுக்க வேண்டும். எடுக்கவும் முடியும். அப்போதுதான் அது உண்மைக்கு நெருக்கமாக இருக்க முடியும். நம்பலாம். அவர்களது ஏழை அல்லது மத்தியதர வர்க்கத்தினர் கார் வைத்திருப்பார்கள். யாரெவர் என்ற பாகுபாடில்லாமல் மிகச் சாதரணமாக உதட்டுடன் உதடு முத்தமிட்டுக் கொள்வார்கள். இதெல்லாம் நம்மவர்கள் செய்தால் ஒத்துக் கொள்ள முடியுமா?

ஆனால் ஆங்கிலப் படத்துக்கு நிகரான தொழிநுட்பம் மற்றும் கதைகளின் பன்முகத்தன்மை நம் தமிழ் படங்களில் இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். நாம் கதை சொல்வதற்கு ஏராளமான கருப்பொருட்கள் உலகில் விரவிக் கிடக்கின்றன. காதல், துரோகம் போன்ற ஒரு சிலவற்றுக்குள் முடங்கிக் கிடப்பதுதான் தமிழ்ச் சினிமாவின் குறைபாடு.  

Friday, December 3, 2010

பெரியார் யார்?

ஈரோடு வேங்கட ராமசாமியாகப் பிறந்து 'பெரியார்' என்றே அழைக்கத்தக்க வகையில் பெரியாராக மதிக்கப்பட்டு இறந்துபோன ஒரு சாதாரண மனிதனின் சரித்திரத்தை எந்தவொரு சார்புமில்லாமல் 'பகுத்தறிவுடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


ராமசாமிக்கு அவருடைய வாழ்நாளில் பல முகங்கள் இருந்தன. ஒரு சிறந்த வணிகர், கோவில் நிர்வாகி, அரசியல்வாதி, கட்சித் தலைவர் என்று நீளும் பட்டியல் இருந்தாலும் அவரே சொன்னபடி அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்தான். மனிதன் மட்டுமல்லாமல் எந்தவொரு உயிரினமும் தனக்கு தீங்கு நேர்கையில் டார்வினின் 'தப்பிப் பிழைத்தல்' கொள்கையின்படி அதிலிருந்து தப்பிப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். ராமசாமிக்கு அவருடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்கள் பின்னாளில் அவர் எப்படி வாழவேண்டும் என அடி எடுத்துக் கொடுத்தன. அவருடைய சிந்தனைக்கும் சுதந்திரத்திற்க்கும் எதிராக சமுதாயம் இருந்தபோது அவர் அதனை எதிர்க்க ஆரம்பித்தார்.


அவரது ஆரம்ப வாழ்க்கையை நோக்கும்போது அவர் ஒரு பணக்கார வியாபாரியின் கடைசி செல்ல மகனாகவும் குறும்புகளின்  கண்ணனாகவும்  இருந்திருக்கிறார்.வீட்டில் அவரது தொல்லை தாங்க முடியாது என்பதற்காகவே அவரை பாடசாலைக்கு அனுப்பிவிடுவார்கள்.அங்கே பெற்றோரினால் அனுமதி மறுக்கப்பட்ட சாதியினரிடம் எல்லாம் நீர் வாங்கி பருகியிருக்கிறார். அவர் வீட்டில் எப்போதும் பூசை புனஷ்காரம்  நடந்தவாறே  இருக்கும். அது அவரின் சுதந்திரத்திற்கு தடையாய்  இருந்திருக்கிறது.ஆச்சாரம், சடங்குகள் மிக நுணுக்கமாக கடைப்பிடிக்கப்படும் அக்குடும்பத்தில் குளிப்பதற்கு கூட வராமல் அடம்பிடித்திருக்கிறார். இதனால் பெற்றோர் இன்னும் கட்டுபடுத்தமுயல அதற்கு மேலாக அவர் அதனை உடைக்க முயற்சித்திருக்கிறார்.
தண்ணீருக்குள் அமிழ்த்தப்படும் பந்துதானே விரைவாக வெளியே வரும்.


பின்பு வாலிபனாக வளர்ந்தபோது பார்ப்பனர்களின் ஒழுக்கமின்மையும் தீய நடவடிக்கைகளும் அவர் உள்ளத்தை பாதித்தன. எளிய மக்கள் அவர்களால் இலகுவில் ஏமாற்றப்படுவதையும் சாதி, மதம் மற்றும் தீண்டாமை எனும் கரங்களாலும் அவர்கள் கழுத்து நெரிக்கப்படுவதாகவும் உணர்ந்தார். அதுவரை தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தட்டிக் கேட்டு அனுபவம் பெற்றவர். இப்போது மற்றவர்களுக்காகவும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார்.


ஒரு தடவை ஒரு பார்ப்பனரின் வீட்டில் முஸ்லிம் மதத்தவரை அழைத்துச் சென்று கலக்கம் செய்ததனால் தன் தந்தையினால் மற்றவர்கள் முன்னிலையில் முகத்தில் செருப்படி வாங்கினார். அதனால் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் காசி யாத்திரை புறப்பட்டார். அங்கே ஒரு பிராமணரால் அவர் ஒரு நாயக்கர் என்பதனால் உணவு கொடுக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே தள்ளிவிடப்பட்டார். இப்படியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் பார்ப்பனர்களாலேயே அதிகம் பாதிக்கப்பட்டார். இது அவரை முழுமையாக அவர்களுக்கு எதிராக செயற்படத் தூண்டியது எனலாம்.


சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கும் அநீதியைக் கண்டால் உணர்வு பொங்கும்தான். எதிர்த்து போராட வெறி வரும்தான். இந்த மனித உணர்ச்சிகள்தான் எம்.ஜி.ஆர்.,ரஜினி,ஜாக்கிசான் படங்களை அவ்வளவு வசூலுடன் ஓட வைத்தன. ஆனால் இந்த வெறியை அவர்கள் வெளிப்படுத்துவது இல்லை. காரணங்கள் பல. அவற்றுள் முதன்மையானது தம்மைவிட பலமானவற்றை எதிர்த்தால் தங்கள் தற்போதைய இருப்புக்கே மோசம் வந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் பெரியார் போன்ற ஒரு சிலர் 'அதிகபிரசங்கித்தனமாக' செயற்பட்டார்கள். அவர்களுக்கு தங்கள் சாதாரண இருப்பைவிட தங்களின் மனத்திருப்திதான் முக்கியமாகப்பட்டது. ஆனால் அந்த செயற்பாடும் ஒரு வரையறைகுட்பட்டதுதான் என அவர்களுக்கே தெரியாது.


ஏழைமனிதன்  போராட்டத்தில் இறங்கும்போது அவனது அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வேட்டு வைக்கப்படுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அதனால் இந்த சாதி, மதம், பேதம் எல்லாவற்றையும் சரியா பிழையா என ஆராய்ந்து பார்க்க கல்வி அறிவுமில்லாமல் பிழை எனத் தெரிந்தாலும் வயிற்றுப் பலவீனத்தினால் தன்னை சுற்றி எழுப்பப்பட்டிருந்த கோட்டையை தகர்க்கக் கூடிய சக்தியற்று இருந்தான். ஆனால்  பெரியாருக்கு உடல் ஆதரவுக்கு ஓரளவு செல்வமும் மக்கள் ஆதரவு தர கட்சியும் மன ஆதரவுக்கு மனைவியும் இருந்தனர். இந்த மூன்றும் அவருக்கு கை கொடுத்தாலும் அவர் தொடர்ந்து சுயமரியாதைக்கான போராட்டங்களை நடத்துவதற்கான அடிப்படைச் சக்தியாக இருந்தது அறியாமையினால் வீணாக அவதிப்படும் மக்களை எப்படியாவது காப்பாற்றவேண்டுமே என்கின்ற அடங்காத அவாவே என்றால் அது மிகையில்லை.


மதநீக்கம் (Secularisation) 


பெரியாரை நேரடியாகப் பாதித்ததும் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்ற அடங்காத அவாவை ஏற்படுத்தியதுமான பல காரணிகளில் பிரதானமானது அவரை சூழ இருந்த மதம்தான். அவர் மதத்தின் மீதான தன் நிலைப்பாட்டை  ஆராய முன் மதம் என்றால் என்னவென்று பார்த்துவிடலாம். 

 மதம் என்பது கடவுள் இருக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கடவுள்தான் இந்த உலகத்தையும் அண்டசராசரங்களையும் படைத்தவர். எல்லாம் வல்லவர். இரக்கமுள்ளவர். முக்காலமும் அறிந்தவர். நாம் குற்றங்கள் செய்தால் தண்டிப்பவர். இவை எல்லா மதத்திற்கும் பொதுவான விடயங்கள். நாத்திகம் என்பது இதற்கு நேர் எதிரானது. விஞ்ஞான ஆய்வுகளின்படி பகுத்தறிவின்படி கடவுள் என்பவர் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது. இந்த இரண்டில் பெரியார் எந்தப் பக்கம் என ஆராய்ந்தால் மேலோட்டமாக பார்த்தால் அவர் ஒரு நாஸ்திகராக தோற்றமளிப்பார். ஆனால் அது உண்மையில்லை. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைப் பற்றி தத்துவரீதியாகவோ விஞ்ஞானரீதியாகவோ ஆராயாமல் மதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளுக்காக மட்டுமே மதத்தை , கடவுளை இல்லை என்றார். என்னை பொறுத்தவரையில் அது அவர் செய்த தவறு.


கடவுள் என்கின்ற எண்ணக்கருவை நம்புவது என்பது அடிப்படை மனிதத் தேவைகளில் ஒன்று. நம்மை சிறுவயதில் யாரும் அடித்தால் அம்மா என்று அழைத்தோம். உண்மையில் அப்போது அம்மா நம்மைக் காப்பாற்றுவார் என உளமார நம்பினோம். வாய்ப்பும் இருந்தது. ஆனால் வளர்ந்த பிறகும் ஆபத்தின்போது "அம்மா, ஐயோ!" என்றுதான் அழைக்கிறோம். அம்மா நிச்சயமாக அந்த இடத்திற்கு வரவோ அல்லது காப்பாற்றவோ நூறு சதவிகிதம் சாத்தியம் இல்லை என்றாலும் அவ்வாறுதான் செய்கிறோம். அப்போது அம்மா என்பதன் பொருள் யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன் என்பதுதான். பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களை அழைப்போம். அப்படி யாரும் இல்லாதவிடத்தில்தான் அதுவும் கடைசியாகத்தான் நாம் கடவுளை அழைக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் கடவுளை நம்பாதவன்கூட "ஐயோ, கடவுளே" என்று சொல்வதைக் கண்டிருக்கிறோம். சிறுவயதில் அம்மாவும் வளர்ந்தபின் கடவுளும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நம்பிக்கை மட்டுமல்ல. தேவையும் கூட. டார்வினின் கொள்கைப்படி மனிதப்பிராணி ஆபத்துக்களிலிருந்து தப்பித்தே ஆகவேண்டும்.


கடவுள் இல்லாத உலகத்தை சாதாரண மனிதர்களால் மட்டுமல்ல,விஞ்ஞானிகளால் கூட கற்பனை பண்ணும்போது மயக்கமும் குழப்பமும் ஏற்படுகிறது. கடவுள் இல்லை என்றால் இந்த உலகத்தை படைத்தது யார்? அல்லது உருவானது எப்படி? கடவுள் இல்லை என்றால் நல்லவர்களை ஆபத்தில் இருந்து  காப்பாற்றுவது யார்? தீயவர்களைத் தண்டிப்பது யார்? கடவுளும் இறை நம்பிக்கையும் தண்டனையும் இல்லாவிட்டால் உலகில் குற்றங்கள் பெருகிவிடாதா?


மேற்கண்ட கேள்விகள் மற்றும் தேவைகள் பெருகியதாலேயே மனிதன் கடவுளைப் படைத்தான். ஆனால் அவன் பெரியார் சிந்தித்ததுபோல சதித்திட்டம் ஒன்றும் தீட்டவில்லை. ஆரம்பகால மனிதன் இடி, மின்னல், மழை போன்றவற்றை அதாவது தன் புத்தியால் விளக்க முடியாதவற்றை அப்போதைய அவனது புத்தியின் அளவைக் கொண்டு  இவை எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்லிவிடுவது இலகுவாக இருந்தது.


கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகக் கடினம். இருக்கிறார் என்றால் எங்கே காட்டு என்பார்கள். இல்லை என்றால் இந்த உலகம் எப்படித் தோன்றியது சொல் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்றைய மதங்கள் விவரிப்பது போல கடவுள் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தாலும் அவரை வணங்க வேண்டிய அவசியமில்லை. பொறுங்கள். குழம்ப வேண்டாம்.


கடவுளைப் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்களை சற்று ஆய்வு செய்யலாம். முதலாவது கடவுள் நல்லவர் என்பார்கள். ஆனால் இந்த நல்ல கடவுள்தான் இந்த உலகிலுள்ள தீய விடயங்களையும் படைத்தார். ஏனெனில் எல்லாம் அவன் செயல். இரண்டாவது வல்லவர் என்பார்கள். அவர் வல்லவராய் இருந்து என்ன பயன்? அள்ள அள்ளக் குறையாத செல்வங்களைத் தன்னிடம் வைத்திருந்தும் அவற்றை மனிதன் அனுபவிக்கத் தராமல் மனிதன் நெற்றி வேர்வை  நிலத்தில் விழ உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்று விதித்திருக்கிறார். தருவதென்றால் அவருக்கு கோவில் கட்டிக் கும்பிட வேண்டுமாம். கேட்டால்தான் ஏதோ கொஞ்சம் கிள்ளிப் போடுவார்.அவ்வளவு வல்லவராய் இருக்கிறவர் இருக்கும் தீய விடயங்களை ஒரே வினாடியில் அழித்துவிட்டு எல்லா மனிதர்களையும் அனுபவிக்க விட்டிருக்கலாமே? முக்காலமும் அறிந்தவராய் இருந்தால் எம்மை அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே என்று ஆணையிட்டு என்ன பிரயோசனம்? என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது எல்லாமே அவர் எழுதிவைத்த தலை எழுத்துத்தானே.அதை நாங்கள் மாற்றி நடக்க வேண்டும்?     எல்லாவற்றையும் விட ஏன் அவர் நம் கண்ணில் படாமல் ஒளிந்திருக்க வேண்டும்? எங்களிடம் அவருக்கு என்ன பயம்? நாங்கள் அவரது படைப்புத்தானே? அல்லது எங்கள் முன்னால் வந்தால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா? அவர் ஒரே ஒரு தடவை நம் எல்லோர் முன்பும் வந்து 'நான்தான் கடவுள்' என்றும் குறிப்பிட்ட மதம்தான் சரியானது என்று சொல்லிவிட்டு சென்றால் இவ்வளவு குழப்பம் தேவை இல்லையே.


எனவே இன்றைய மதங்கள் கற்பிப்பது போன்ற கடவுள் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர் மேற்சொன்ன குறைபாடுகளைக் கொண்ட கடவுளாகத்தான் இருப்பார். அவரை வணங்க வேண்டிய அவசியமில்லை. சிலவேளைகளில் இந்த அண்டம் முழுவதையும் ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது அளவிடக்கூடிய விஞ்ஞான ரீதியான சக்தியாக இருக்குமே ஒழிய தன்னை வணங்கச் சொல்கின்ற, கோவித்துக் கொள்கின்ற, கல்யாணம் முடித்து பிள்ளைகள் பெற்றுக் கொள்கின்ற அதாவது மனித சுபாவங்கள் கொண்ட சக்தியாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. 


சரி. கடவுளை நம்புவதாலும் மதத்தை பின்பற்றுவதாலும் எவ்வித நன்மையும்  இல்லையா? உண்டு. கடவுள் நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையின் இன்னொரு வடிவம். நல்லதே நடக்கும், தர்மம்தான் கடைசியில் ஜெயிக்கும் போன்ற நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். குற்றங்கள் செய்யப்படும் வீதத்தை குறைக்கும். ஆன்மிகம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும். சக மனிதர்களை நேசிக்கச் சொல்லும். ஆனால் அதுவே தன் சொந்த மதத்தின்மீது மதம் பிடிக்க வைக்கும் வேலையைச் செய்யும்போது அதனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.  


எல்லா மதத்தின் அடிப்படை நாதமே அன்புதான். இந்த உலகத்தை படைத்ததே ஒரு கடவுள்தான். அப்படியானால் மனிதர் யாவருமே அவருடைய பிள்ளைகள்தான். ஆகவே நாம் சகோதரர்களாகத்தானே வாழவேண்டும்? ஆனால் அதனை மறந்து மற்ற மதங்களின்மீதான வெறுப்பு அதிகரித்து சகிப்புத்தன்மை குறையும் நிலை இருக்கிறது. தன் கடவுள்தான் உண்மையானவர். மற்ற கடவுள்களை நம்புகிறவர்கள் எல்லோரும் மடையர்கள், காட்டுமிராண்டிகள் என்ற மனப்பான்மையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சிறுவயதிலிருந்தே அவரவர் மதத்தினால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. 


உன் மதம்தான் உண்மையானது என்பதற்கு உன்னிடம் இருக்கும் ஆதாரம் என்னவென்றால் பதில் அது என் பெற்றோரின் மதம் என்பதுதாகவும் அம்மதத்தின் புனிதநூல் அவ்வாறு கூறுகிறது என்பதாகத்தான் இருக்கும். கனவில் கடவுளைக் கண்டேன், கடவுள் என்னைக் குணமாக்கினார் என்பவர்கள் எல்லாம் உளவியல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டியவர்கள். இது சத்தியமாக ஜோக்கல்ல. நான் என் பெற்றோரின் மகனாகப் பிறந்ததினால் சிறுவயதிலிருந்தே என் மதத்தைக் கடைப் பிடிக்கிறேன். நான் பிறக்கும் முன்பே நான் எந்தக் கடவுளை நம்ப வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. நாம் பிறந்து வளரும்போது அம்மதத்தின் சூழலிலேயே இருப்பதனாலும் அம்மதத்தின் நல்ல விடயங்களை அறிந்து கொள்வதாலும் அதன்மீது பற்று நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் மற்ற மதங்களின்மீது மதிப்பு குறைவதற்கு காரணங்களாக  நாம் நம் மதத்தை அறிந்துகொண்ட அளவுக்கு அறியவில்லை அல்லது அறிவதற்கு முயற்சி எடுப்பதில்லை அல்லது வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பவற்றைக் குறிப்பிடலாம்.  இன்னொன்று உண்டு. எப்போதுமே மனிதனுக்கு தனது சொந்த விடயங்களை பாதுகாப்பதில் டார்வினின் கொள்கைப்படி அக்கறை உண்டு. தனது பண்பாடு, கலாச்சாரம், இனம், தேசியம், இவற்றை அவன் எவ்வளவு அக்கறையாக மதிக்கவும் பாதுகாக்கவும் தயாராக இருப்பானோ அதே அளவு தன் மதத்தின்மீதும் மிகுந்த பற்று வைத்திருப்பான். அது அவனுக்கு ஒரு அடையாளம். அதன் மதிப்பு குறைந்து போனால் அது அவனுக்கு ஒரு அவமானம். சிறு வயதிலிருந்தே நாம் மதித்துவரும் ஒரு பொருளை யாராவது மட்டந்தட்டிப் பேசும்போது நமக்கு கோபம் வருவது இயல்புதானே. தன் பெற்றோரின் மதத்தை இழிவுபடுத்துவது அவனுக்கு தன் பெற்றோரையே இழிவுபடுத்துவதுபோலத்தான் இருக்கும். இதே விடயங்கள் எல்லா மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் இருப்பதனால் அவர்களிடையே மோதல்கள் எழுவதற்கு சாத்தியங்கள் அதிகமாகின்றன.


எந்த மதம் உண்மையானது என்பதை ஆராய்வதற்கு ஒருவன் தன் மதத்தினின்றும் வெளியே வந்து நிர்வாணமாக சிந்திக்க வேண்டும். அவனது அச்சிந்தனையில் அவனது மதம் செல்வாக்கு செலுத்தக்கூடாது. இது கலாச்சாரம், சாதி, மொழி, நாடு ஆகியவற்றின் மீதான சிந்தனைகளுக்கும் பொருந்தும். 


மொழி  

பெரியாரின் மொழி சம்பந்தமான கருத்துக்கள் வரலாற்றில் பெரியோர்களினால் அரிதாகத்தான் கூறப்பட்டிருக்கின்றன. அதிலும் பெரியாரின் கருத்துக்கள் மிகவும் முற்போக்கானவை. மிகப் பெரும்பாலானவர்களால் சகிக்கக்கூட முடியாதவை. ஆனால் என்னால் முற்றிலும் விரும்பப்படுபவை. மொழி பற்றிய பெரியாரின் கருத்து பின்வருமாறு.

"மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனமல்ல. அது இயற்கையானதுமல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களை புரிந்துகொள்ள  வாய்ப்பளிக்கும் அளவுக்கு தேவையானதே ஒழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல. "

எவ்வளவு தெளிவான ஒரு விளக்கத்தை பெரியார் அளித்திருக்கிறார். சொந்தக் கலாச்சாரம், இனம், சாதி, நாட்டில் ஒரு மனிதன் எவ்வளவு பற்று வைத்திருக்கிறானோ அதே அளவு தன் மொழிமீதும் வைத்திருக்கிறான். ஆனால் மொழிமீது அவ்வளவு பற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தான் பிறக்கும்போது கிடைத்த மொழி என்பதாலேயே பலரும் அதனை நேசிக்கிறார்கள் அல்லது சிறுவயதிலிருந்தே நேசிக்கப் பழக்கப்படுகிறார்கள். 

மொழிகளை ஆராய்கையில் சில மொழிகள் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் சிறப்பான இலக்கண இலக்கியங்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று. நம் மொழிக்கு சிறப்பு இருப்பதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அது அச்சிறப்பினை பெறுவதற்கு நாம் இம்மியளவேனும் எதேனு செய்திருக்கிறோமா? அது கால ஓட்டத்தில் மற்ற செம்மொழிகளைப் போலவே தற்செயலாக அமைந்துவிட்டது. ஏதேனும் சில மொழிகள் கட்டாயம் பழைமை வாய்ந்த மொழிகளாக இருப்பது கால ஓட்டத்தின் நிகழ்தகவில் நடந்தே தீரும். இதிலென்ன பெருமை வேண்டியிருக்கிறது?
மொழி என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சொல்ல வேண்டிய விடயத்தை கொண்டு செல்லும் ஒரு ஊடகம் மட்டுமே. எல்லோருக்கும் அவரவர் பிறந்த சூழலினால் ஒவ்வொரு மொழி கிடைத்திருக்கிறது. உண்மையில் அது உன் தாய் மொழி அல்ல. அது நீ பிறந்து வளர்ந்த இடத்து மொழி. நீ இங்கே பிறந்து ஆப்பிரிக்காவில் வளர்ந்திருந்தால் நீ இப்போது கேட்டுச் சிரிக்கும் ஆப்பிரிக்க காட்டு மொழி ஒன்றைப் பேசியபடி அத பெருமைகளை பறைசாற்றியபடி இருந்திருப்பாய். 'மொழிகள் தனித்தனியாகப் பிரிவதும் மொழிக்குள்ளேயே வழக்கு வேறுபாடுகள் ஏற்படுவதும் தட்பவெப்பச் சூழல், போக்குவரத்தின்மை, பிறமொழிக் கலப்பு ஆகியவற்றின் விளைவுதான்' என பெரியார் குறிப்பிட்டார்.  

மொழி என்பது இறுக்கமான வரையறைகளைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் பெரியார் தெளிவாக இருந்தார். 'காலம்தோறும் மொழி அமைப்பிலும் வரி வடிவத்திலும் சொற்களஞ்சியத்திலும் உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பு. எனவே மொழியில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்பது மடமை' என்றார். அவரே நேரடியாக மொழி வல்லுனர்களின்  எதிர்ப்பையும் மீறி திருத்தம் செய்தார்.  

உண்மையில் மொழியைப் பெருமை பேசி அதன் 'மறுமலர்ச்சி' நடந்துகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் பெரியார் தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். அது அவர் தன் கருத்தை வலியுறுத்த அல்லது நன்றாக உறைக்க வேண்டும் என்பதற்காக சொன்னார். ஆனால் மொழியின் சதியை அவர் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் மொழி ஒருபோதும் சாதியை ஒழிக்கப் பயன்படவில்லை என்ற கோணத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறினால் அதனை பேசும் தமிழர்களும் காட்டுமிராண்டிகள்தானே என 'சுத்தத் தமிழர்கள்' எடுத்துக் கொண்டனர்.   தன் கருத்தை வலியுறுத்துவதற்காக தன் சத்தத்தை அதிகரித்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மடமை. அனேகமாக அதைத் தெரிந்து வைத்திருந்த பெரியாரே சில சமயங்களில் 'ஓவர் அக்டிங்' செய்திருக்கிறார். வெங்காயம் என்ற அவரது பிரபல வார்த்தைப் பிரயோகமும் ராமர், பிள்ளையார் சிலை உடைப்புக்களும் இதற்கு உதாரணங்கள். நீங்கள் ஒருவனுக்கு மிக மிகச் சரியான கருத்தைக் கூறினாலும் அது அவனுக்கு மிக மிகப் பயன்படும் என நீங்கள் கருதினாலும் அதைச் சொல்லும் முறையில் சொன்னால்தான் அது அவன் காதில் ஏறும். எப்போதுமே அறிவுரைகள் கசப்பானவைதான்.

ஒரு விடயத்தை அதிரடியாக எதிர்க்கும்போது அல்லது காலம் காலமாக சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்த விடயங்களைப் பற்றி தலைகீழான கருத்துக்களைக் கூறும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தல் நன்று. எப்படியாவது மனமாற்ற வேண்டுமே என்கின்ற வெறியில் தீவிரமான நடவடிக்கைகளில் நாம் ஈடுபடும்போது அதன் தீவிர புதுமைக் கருத்துக்களால் கவரப்பட்ட ஒரு சில குழுவினரே நம்முடன் இணைந்து கொள்வர். பரந்த அளவிலான நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நிதானமும் பொறுமையும் அவசியம். உங்கள் மனதில் தோன்றிய அந்த புதுக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கான அறிவு மட்டுமல்லாமல் சந்தர்ப்பங்களும் தேவைகளும் உங்களுக்கு சந்தர்ப்பவசத்தால் அமைந்ததனால்தான் நீங்கள் அவற்றை நம்புகிறீர்கள். அப்படி அமையாத மற்றவர்கள் உடனடியாக அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும்? அதுவும் அக்கருத்தை ஏற்றுக் கொள்வதனால் அவர்களுக்கு தீமை விளைகிறது என்னும்போது இன்னும் அது சாத்தியம் இல்லாமல் போகின்றது.

சமுதாயத்தில் சிலவிடயங்களை மாற்ற விரும்பும்போது அதன் ஆணிவேரைப் பற்றிய ஒரு பரந்த ஆய்வு மனப்பான்மை வேண்டும். ஏன் அவை இவ்வளவு காலமும் வேரூன்றி அழியாமல் இருக்கின்றன என்றும் அதனால் தீமைகளைத் தவிர நன்மைகளும் உண்டா என்றும் அலச வேண்டும். உண்மையில் எந்த ஒரு சமுதாயமோ அல்லது ஒரு மனிதனோ தனக்கு ஒரு நன்மை கிடைக்காமல் எந்த ஒரு விடயத்தையும் தொடந்து பின்பற்றாது.ஆனால் அது இக்காலத்திற்கு பொருத்தமானதா என்றும் எல்லா தனி மனிதருக்கும் அந்த விடயத்தைப் பிரயோகித்து அதனை செய்யும்படி வற்புறுத்துவது சரியாய் என தீர்மானிப்பது இங்கு முக்கியமானதாகும்.

இன்னும் ஆராய்ந்தால் தேவை இல்லாதது நிச்சயம் காலப் போக்கில் அழிந்து போகும். அது பரிணாம முடிவு. பழைய விடயங்களை அழித்து புது விடயங்களை புகுத்த விரும்பும் எவரும் இயற்கையின் பரிணாமத் தத்துவத்தின் செயற்பாடுக் கருவிகள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே பரிணாமத்தின் கருவிகள்தானா என ஆராய்வது முக்கியம்.  

மொழியை வளர்த்தல் என்கிற இன்னொரு விடயமும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மொழியின் பரப்பு என்பது காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் தானாக வளர்கிறது. மொழி வளர்ச்சி என்பது ஏற்கனவே உள்ள சொற்களுக்கு ஒத்த சொற்களை உருவாக்குவதில்லை. ஒரே அர்த்தத்தைக் தரக்கூடிய பத்துச் சொற்கள் இருந்து பிரயோசனமில்லை. அப்படி இருப்பது கவிதை எழுதுபவர்களுக்கு நன்மையளிக்கலாம். ஆனால் மொழியைக் கற்பவருக்கு அது மேலதிக சிரமத்தைக் கொடுக்கும். மொழி காலத்திற்கேற்ப புதுப் புதுச் சொற்களை இயல்பாகவே மக்களிடையே உருவாக்கிக் கொள்ளும் அல்லது பிற மொழிகளிருந்து உள்வாங்கிக் கொள்ளும். உதாரணமாக ஆங்கிலச் சொற்களான ஐஸ் க்ரீம், சைக்கிள் போன்றவை சாதாரண மக்களால் கூட பாவிக்கப்படும் தமிழ் சொற்கள் போல மாறிவிட்டன. இவற்றிற்கு கட்டாயம் புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கி ( குளிர்களி, உந்துருளி) கட்டாயமாக செருகி பாவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கணணி மற்றும் அறிவியல் தொழிநுட்பவியலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் விடயங்களுக்கு நாம் புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கவேண்டியுள்ளது. ஆனால் அவற்றிற்கு கூட அந்த ஆங்கிலச் சொற்களையே நாம் பாவிக்கலாம் என்பது என் கருத்து. அத்துறையைப் பற்றிப் படிப்பவருக்கு இரண்டு சொற்களை ஒரே விடயத்திற்காக மனனம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போகும். அதாவது தொடர்பாடலை மிகச்சரியாக மேற்கொள்ள பொருத்தமான சொற்களை அல்லது மொழியை பாவித்தாலே போதும். அது கட்டாயம் நம் தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.     

Wednesday, July 28, 2010

அன்புள்ள எல்லா மனிதர்களுக்கும்...

அன்புள்ள எல்லா மனிதர்களுக்கும்...நான் உங்களிடம் நிறைய பேச விரும்புகிறேன். நிறைய கருத்துக்களை பரிமாற ஆசைப்படுகிறேன். ஆனால் அவற்றை விட உங்களிடமிருந்து நிறைய கருத்துக்களை எதிர்பர்ர்க்கிறேன். எனது இந்த வலைப்பூ மற்றைய பூக்களை விட சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். நான் சொல்லப் போகும் விசயங்களில் அநேகமானவை நிச்சயம் உங்களால் ஏற்க...ஏன்...சகிக்க கூட முடியாமல் போகலாம். நல்லது...நான் கடலலைகளைத்தான் விரும்புகிறேன். அமைதியான சாக்கடையை அல்ல....ம்...ஆரம்பிப்போமா....?




எனது வேறுபட்ட எண்ணங்கள் வேறுபட்ட தளங்களில் பரவியிருக்கின்றன. அவற்றிற்கு முகவரிகள்...


என்னுள் இறக்காத என் இறந்தகாலங்கள். இவ்வுலகில் நான் வாழ்ந்து களித்த மற்றும் கழித்த கணங்கள்.
தமிழில் it is time to tell my story ஆங்கிலத்தில் AN AUTOBIOGRAPHY OF A HUMBLE MAN

பிறப்புரிமையியல்

என் பிறப்புரிமை
என்னிடம் இல்லை.
அப்பா வெள்ளை
அம்மா வெள்ளை
என்னடா நீ மட்டும் கறுப்பு?
சிரித்தார்கள் நண்பர்கள்.
சிரித்தார் என் தாத்தாவும்
போட்டோவில் கறுப்பாக...!

அழகான தெருக்கள்...!

தெருவே அழகாய் இருந்தது.
வரும் பெண்களெல்லாம்
அழகாய் இருந்தார்கள்.
பொறு, நம் அழகில்லாத
பெண்களெல்லாம் எங்கே?
அழகை மட்டும் ரசிக்கும்
ஆண்கள் வர்க்கத்திற்கு பயந்து
வீட்டுக்குள்ளேயே
உள்ளடங்கி விட்டார்களா?
தெருவே அசிங்கமாய் இருந்தது.

Friday, December 4, 2009

வீணாய்ப் போகாதவை

சிறு வயதில் ஆசை ஆசையாய்
வாங்கிச் சாப்பிடுகையில்
சட்டையில் சிந்திய ஐஸ் க்ரீம் துளி...


சங்கீதம் ரசிக்கையில்
அடுப்பில் கொதித்து
சிதறும் வெந்நீர்...


வடிவேல், விவேக்
இவர்களுக்காக சிந்தப்படும்
கண்ணீர்த் துளிகள்...


நல்ல சினிமா, பத்திரிக்கை
காற்றோட்டமான பிரயாணங்களுக்கு
செலவாகும் நேரம்...


கவிதை எழுதுகையில்
சரியான வரிகளுக்காக வெட்டப்படும்
தவறான வார்த்தைகள்...

Sunday, July 19, 2009

உன் கதை என்ன?


உன்னைக் கடந்து போகும்
ஒவ்வொரு செக்கனும்
உனக்கே சொந்தமானவை.
உன் வரலாற்றுப் பதிவுகள்.
அவை எழுதினால் எழுதப்பட்டவைதான்.
திரும்பத் திருத்தப்பட முடியாதவை.
உன் வரலாறு இவ்வுலகில்
ஆயிரத்தில் ஒன்றா அல்லது
பத்தோடு பதினொன்றா என்பது
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னால் தீர்மானிக்கப்படுகிறது.
உன் கதையை திரைப்படமாக்கினால்
நீயே அதனை கொட்டாவி விடாமல்
பார்க்கக் கூடியவாறு பார்த்துக்கொள்.
உன் திரைப்படத்தில்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
எல்லாம் உன்னால் மட்டுமே
உருவாக்கப்பட வேண்டும்.
வெறும் நடிகனாக மட்டும் இருந்துவிடாதே...!

Friday, January 30, 2009

தெரியாது

சிறுகதை


அந்த வீடு நகரத்திலிருந்து தள்ளி அதிக தூரமுமில்லாமல் அதிக அருகிலுமில்லாமல் இருந்தது. ஒரு மத்திய தர வர்க்கத்தினரின் வீட்டை விடப் பெரிதாகவும் அகண்ட தோட்டத்துடனும் தோற்றமளித்தது. அந்த வீட்டுக்காரரின் ரசனையை பறைசாற்றும் விதமாய் அழகழகான பூக்கள் வீட்டை சுற்றி பூத்திருந்தன.


"யாருடைய வீடு இது?" என்றேன். ரகு இப்போதும் மர்மமாய் சிரித்தான். காலையிலிருந்து இதே சிரிப்புத்தான். வீட்டில் விடுமுறைதினத்தை டி. வீ.பார்த்துக்கொண்டே இன்பமாய் கழித்துக் கொண்டிருந்தவனிடம் வந்து அவசரமாய் ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று அழைத்தான். என்ன எது என்று சொல்லாமலே "சொல்கிறேன் வா" என்று சொல்லிச் சொல்லியே புறப்பட வைத்துவிட்டான்.


"எங்கே போகிறீர்கள்?"என்று அரற்றிய என் மனைவியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் "இரு,இரு...இப்ப வந்திருவேன்" என்றபடி அவளது அடுத்த கேள்வி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே பாய்ந்தேன்.

ரகு எப்போதும் இப்படித்தான். எங்காவது போகவேண்டும் என்றால் என்னைத்தான் துணைக்கு இழுத்துக்கொண்டு போவான். எங்கே போகிறோம் என்று கூட சொல்லமாட்டான். சொன்னால் சிலவேளைகளில் நான் வரமாட்டேன் என்று நினைக்கிறானோ தெரியவில்லை. ஆனால் தொண்ணுற்று ஒன்பது வீதம் அவன் அழைத்து நான் போகாமல் இருந்ததில்லை.

அவன் பைக்கில் பின்னால் தொற்றிக் கொண்டேன்.

"இன்று உனக்கு முக்கியமான நாள்!" என்றான் ரகு.

"முக்கியமான நாளா? எனக்கா?"


"ஆமாம், அன்றைக்கு உன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று சொன்னாய்?"


நான் யோசித்தேன். 'வாழ்க்கையின் லட்சியமா? என்னவென்று சொல்லியிருப்பேன்? பல இடங்களில் பல பேருக்கு பல மாதிரி சொல்லியிருக்கிறேன். இவனுக்கு என்ன சொன்னேன்?!


"என்னவென்று சொன்னேன்?"


"அடப்பாவி நீயே மறந்துவிட்டாயா? லட்சியமெல்லாம் மறக்கக்கூடிய விசயமாடா? சரி...நீ மறந்தாலும் நான் மறக்கவில்லை. உன் லட்சியம் ஈடேற உனக்கு நான் உதவப்போகிறேன்!"
"டேய், குழப்பாதடா, என்னடா என் லட்சியம்?"
"பொறு. பைக்கை விட்டுவிட்டு வந்து சொல்கிறேன்" அவன் பைக்கை மூடிக் கிடந்த எங்கள் அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தினான்.
"என்ன, பைக்கை விட்டுவிட்டு வரப் போகிறாயா?அப்படிஎன்றால் நாம் எப்படி போவது?"
"பொறு, அவசரப்படாதே!" பைக்கை உள்ளே விட்டு பூட்டிவிட்டு வந்தான்.
நான் இந்த நகரத்திற்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டன. ஆனால் ரகு எனக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அறிமுகமானான். என் அலுவலகத்திற்கு ஒரு கிளார்க்காக நியமனம் பெற்று வந்தான். நல்ல கலகலப்பானவன். செய்யும் தொழிலுக்கேற்ப சிறந்த வாயாடன். திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகளும் உண்டு. சம்பளம் பெரியளவில் இல்லை என்றாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துவிடத் துடிக்கும் ஆர்வம் அவனது வார்த்தைகளில் தெறிக்கும். அவனது கருத்துகளில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவன் பேசுவதைக் கேட்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிரெதிர் முனைகள்தானே ஒன்றை ஒன்று கவரும். அதனாலேயே குறுகிய காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.
"கொஞ்சம் பொறு, வீட்டுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன்."
எத்தனை பொறு! என்னால் பொறுக்க முடியவில்லை. ஒருவேளை தன் வீட்டிற்கு என்னை கூட்டிக் கொண்டு போகிறானோ? நாங்கள் பழகத் தொடங்கி ஒரு வருடமாகியும் அவன் தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. அலுவலகம், பார் ,சினிமா என்ற வட்டத்திற்குள்ளேயே எங்கள் நட்பு ஓடிக் கொண்டிருந்தது. என் வீட்டிற்கு அவன் வருவது கூட அரிதுதான். வந்தாலும் வெளியே நின்றுதான் கூப்பிடுவான்.
ரகு மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"மீரா, நான் நேற்றுச் சொன்ன மாதிரி இன்றைக்கு மத்தியானம் வரமாட்டேன். நான் வர இரவாகிவிடும். நீர் உம் பிரன்ட் வீட்டுக்கு போறதென்றால் போய் வாரும். வினோக்குட்டி எங்கே?"
"....."
"ஆங்...பாட்டி வீட்டிலேயே நிற்கட்டும். சரி அப்புறம் போன் பண்றன்."
அடப்பாவி! அப்ப அவன் வீட்டுக்கும் இல்லையா? எங்கதான் கூப்பிடுகிறான்? பாருக்கா? பாருக்கு போறதுக்கெல்லாம் இவ்வளவு சுத்தி வளைக்க மாட்டானே!
"இப்ப ஒரு ஆட்டோ பிடிக்க வேண்டும்" என்றான் ரகு.
"ஆட்டோவா? ஆட்டோவில அப்படி எங்கதாண்டா கூட்டிப் போறாய்?"
"கொஞ்சம் கேள்வி கேட்கறதை நிப்பாட்டுறாயா ?"
ஒரு ஆட்டோவில் பிரயாணித்தோம். இறங்கிய இடம்தான் அந்த மத்திய தரவர்க்க வீடு.
"யாருடைய வீடு இது?" என்ற என் அடக்க முடியாத கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுபடியும் மர்மப் புன்னகை பூத்தான்.
"உள்ளே வா. தெரிந்து விடும்!"
இரண்டு மூன்று கட்டிப் போட்ட அல்செசன்கள் எங்களை முறைத்தன. வீட்டின் முன் ஹோல் ஒரு ரிசப்சன் அறை போல தோற்றமளித்தது. போடப் பட்டிருந்த குசன் இருக்கைகளின் நுனியில் இருவர் அமர்ந்து எங்களைப் பார்த்து திருட்டு முழி முழித்தனர். ஒரு பெண் கவுன் அணிந்து குறுக்காக நடந்து போனாள். இது ஏதாவது அலுவலகமா? வெளியில் ஒரு பெயர் பலகையை கூட காணவில்லையே.
ரகு ரிசப்சன் மேசையை அணுகி ஏதோ பேசினான். நான் ஒரு ஆசனத்தில் அமர்ந்து அவன் வரும் வரை காத்திருந்தேன். சற்று நேரத்தில் திரும்பி வந்தான். அருகில் அமர்ந்தான். புன்னகைத்தான்.
"டேய், உன் சிரிப்பை நிறுத்திவிட்டு சொல்கிறாயா?'
"இரு, பறக்காதே, சொல்கிறேன். நான் உன்னை அன்றைக்கு உன் லட்சியம் என்னவென்று கேட்டதற்கு ஒரு பெரிய பணக்காரனாக வருவேன் என்றோ அல்லது ஏதாவது ஒரு சாதனை செய்யப்போகிறேன் என்றோ சொல்வாய் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்தாலே அது ஒரு சாதனைதான். அதுதான் உன் லட்சியம் என்று சொன்னாய். அப்பவே நீ என் பக்கமாக வந்துவிட்டாய் என்று புரிந்து கொண்டுவிட்டேன். அதற்குத்தான் நான் உனக்கு உதவி செய்யப் போகிறேன்."
"ஒ, அதுவா? எப்படி?"

"இது என்ன இடம் தெரிகிறதா?"
"தெரியலியே?"
"நீ உன் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் பார்க்கப் போகும் இடம். உலகின் மிகப் பழமையான தொழில் நடக்கும் இடம். பணம் கொடுத்தால் சந்தோசம் கிடைக்கும் இடம். பச்சையாகச் சொன்னால் விபச்சார விடுதி!"
நான் துள்ளி எழுந்தேன்.
"டேய், விளையாடாதே!"
"உண்மையாகத்தான் சொல்கிறேன். நேற்றே நம்ம இரண்டு பேருக்கும் இரண்டு பெண்களை புக் பண்ணி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த இரண்டு பேரும் வந்துவிடுவார்கள். "
அவன் வார்த்தைகளில் தெரிந்த உண்மையின் தீவிரம் எனக்கு உறைத்தது.
"வாடா,போயிருவோம்" என் குரல் கோபத்தில் நடுங்கியது.
"வினோத், இரு, அவசரப்படாதே. இப்படி ஒரு சான்ஸ் இனி உனக்கு கிடைக்காது."
"இப்ப நீ வரப் போறியா,இல்லையா?"
"வினோத், சொல்றதக் கேளு...எல்.." அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க நான் சடாரென வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ரகு பின்னாலேயே ஓடி வந்தான்.
அப்போது எதிரில் ஒரு தடியன் வந்தான்.
"என்ன சார், எங்க போறீங்க?"
ரகு அவசரமாய் புன்னகைத்தான். "ஒரு இடமும் இல்லை சார். இவன் கொஞ்சம் பயப்படுறான்."
அவன் சிரித்தான். "ஏன் சார் பயப்படுறீங்க? போலீஸ் வந்திரும் என்றா? இதை நடத்துறதே ஒரு போலிஸ்காரர்தான் சார்."
"ரகு, நீ இருந்திட்டு வா. நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போகிறேன்."
நான் மேலும் நடந்தேன். ரகு அந்தத் தடியனிடம் ஏதோ சமாதானம் சொல்லி விட்டு பின்னாலேயே ஓடி வந்தான்.
"வினோத், வினோத், கோவிக்காதடா, உன்னிடம் முதல்லேயே சொல்லாதது தப்புத்தான். சொன்னால் வரமாட்டாய் என்று தெரியும்" அவன் சொல்லிக் கொண்டே வந்தான்.
நாங்கள் வெளியே வந்து ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ஒதுங்கியிருந்த மேசை ஒன்றில் அமர்ந்தோம். கொஞ்ச நேரம் அமைதி. அந்த ஹோட்டலின் 'நாக்கு மூக்கா' இரைச்சலுக்குள் நான்தான் மறுபடியும் ஆரம்பித்தேன்.
"கோபம் ஒன்றுமில்லடா. நீ என்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் மனவருத்தமாக இருக்கிறது. அங்க போறது உன் விருப்பம். நீ போறதில என் கொள்கைகளை சொல்லி உன்னைத் தடுக்க முடியாது. ஆனால் நான் என் மனைவிக்கு துரோகம் செய்வேன் என்று நீ எப்படி முடிவு செய்யலாம்?"
ரகுவின் முகம் இப்போது சீரியசாகியது.
"அப்படியென்றால் நான் மனைவிக்கு துரோகம் செய்கிறேன் என்கிறாயா? இதெல்லாம் யாருடா துரோகம் என்று சொன்னது? நான் என் மனைவிக்கு என் குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்கிறேன். அவளும் சந்தோசமாகத்தான் இருக்கிறாள். கணவனாக நான் என் கடமையை சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன். "
எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
"கணவனாக கடமையை செய்கிறாயா? ஒரு ஒழுங்கான கணவன் செய்யும் வேலையா இப்ப நீ செய்யப் போறது?"
ரகு தன் தலையில் கை வைத்தான்.
"இன்னும் நீ எம். ஜி. ஆர். காலத்திலேயே இருக்கிறாய், மச்சான். நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள். செக்ஸ் என்றால் என்னடா? இனப் பெருக்கத்திற்கான ஒரு ஊடகம். அதை ஏன் நீ இவ்வளவு உணர்வு பூர்வமாக எடுத்துக் கொள்கிறாய்? இந்த மனித சமுதாயம்தான் திருமணம் என்ற சடங்கு நிலைச்சிருக்க வேண்டும் என்பதற்காக கல்யாணம் செய்தால் மட்டுமே நீ செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பிளாக்மெயில் செய்கிறது. எனக்கு திருமண உறவில் நம்பிக்கை இருக்கிறது. அது இருந்தால் சமுதாயம் ஒரு கட்டுக் கோப்புடன் இருக்கும். ஆனால் செக்ஸ்சை அதற்கு பணயப் பொருளாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காதல் வேறு. காமம் வேறு. நான் என் மனைவியை காதலிக்கிறேன். ஆனால் இங்கே ஒரு பெண்ணுடன் வெறும் செக்ஸ்சைத்தான்..."
"கொஞ்சம் நிறுத்துகிறாயா?" என் குரல் என்னை மீறி சற்று உரத்து ஒலிக்க பக்கத்து மேசைகள் திரும்பிப் பார்த்தன. குரலைத் தணித்தேன்.
"மடையா, உன் காம ஆசைக்கு ஏற்ற மாதிரி நீ நியாயங்களை கண்டு பிடித்துக் கொண்டே போவாய். நம்மால் மற்றொருவருக்கு எதுவித துன்பமும் வரக் கூடாது என்பதை நீ ஏற்றுக் கொள்கிறாயா?"
"அது சரி. நான் இங்கே போறதால் யாருக்கு என்ன துன்பம் வரப் போகுது?"
"இது உன் மனைவிக்கு தெரிந்தால் என்னவாகும் என்று யோசித்தாயா? துரோகம் அது இது என்ற வார்த்தைகளை விட்டு விடுவோம். நீ சொல்லும் நியாயங்கள் நீ வளர்ந்த சூழலில் பெற்ற அறிவின்படி உனக்கு சரியாய் தோன்றலாம். ஆனால் அதை நீ நடைமுறை படுத்த வேண்டும் என்றால் நீ தனி ஆளாய் இருந்திருக்க வேண்டும். உன்னைக் கேட்பதற்கு ஆளிருந்திருக்க மாட்டார்கள். உன் மனைவிக்கு இது தெரிந்து துரோகம் என்று சண்டை பிடிப்பது கூட உன் 'நவநாகரீக பகுத்தறிவுக்கு' முட்டாள்த் தனமாய்த் தெரியலாம். ஆனால் உன் மனைவிக்கு அந்தளவுக்கு 'பரந்த மனசு' இல்லையே. அதனால் உன் செயலை நினைத்து அதனால் இப்போதைய சமுதாயத்தில் கிடைக்கப் போகும் கெட்ட பெயரை அவமானத்தை நினைத்து அவங்க எவ்வளவு வேதனைப் படுவாங்க? தன்னில் எதோ குறை இருக்கலாம் என்று கூட அவங்க எண்ணிவிடலாம். சரியோ தவறோ...உன்னை நம்பி வந்த உன் துணையை நீ மன உளைச்சலுக்கு துன்பத்திற்கு உள்ளாக்கலாமா?"
ரகு இப்போது சற்று யோசனையில் ஆழ்ந்தான்.
"நீ சொல்றது சரிதான். ஆனால் மற்றவர்களுக்கு துன்பம் தராமல் நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? கவனி, நான் இங்கே போவது இது முதல் தடவை இல்லை. ஆனால் இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. இனிமேலும் யாருக்குமே தெரியவராது. அதனால் என் மனைவிக்கு தெரிய வராதவரை அவளுக்கு அதனால் துன்பம் இல்லைத்தானே?"
இம்முறை நான் என் தலையில் கை வைத்தேன்.
"இப்ப நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்?"
ரகு சிரித்தான்.
"கோவிக்காதடா. நீ என்னுடன் வா. வந்து ரிசப்சனில் அமர்ந்திரு. நான் மட்டுமாவது போய் வருகிறேன்."
"அப்ப நீ போய்த்தான் ஆகவேண்டும்?"
ரகு மறுபடியும் சிரித்தான். ஆற்றில் இறங்கியாகி விட்டது. இனி நீந்தித்தானே ஆகவேண்டும். மறுபடியும் அவனுடன் அவனது சொர்க்க வாசலுக்குள் நுழைந்தேன்.
ரிசப்சன்காரன் சிரித்தான்.
"என்னவாம் சார், சரியா?"
"இல்ல, நான் மட்டும்தான். அந்த இரண்டு பெண்களும் வந்துவிட்டார்களா?"
"ஒருத்திதான் வந்திருக்கா. மூன்றாம் நம்பர் ரூமில இருக்கிறா. நீங்க போங்க. அதுதான் அவருக்கு வேண்டாம்தானே?" என்றான் ரிசப்சன் என்னைப் பார்த்து கேலியாய்.
ரகு ஏதோ தன் சொந்த வீட்டுக்குள் போவது போல உள்ளே போய்விட்டான். நான் அந்த ஆசனத்தில் அமர்ந்து வாழ்க்கையில் முதன்முறையாக இப்படியொரு காத்திருப்பை செய்ய ஆரம்பித்தேன்.
சற்று நேரம் கழிந்ததும் ரிசப்சனில் இருந்தவன் சிறு புன்னகையுடன் வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.
"என்ன சார், புதுசா?"
"எதுக்கு?"
"இல்ல...ஒரு தடவையாவது ட்ரை பண்ணினதில்லையா?"
"எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது!"
"என்ன சார், கல்யாணம் ஆனவங்கதான் நிறையப் பேர் இங்க வர்றாங்க!"
"அது அவங்கவங்க இஷ்டம். எனக்கு பிடிக்கல." என்றேன் சற்று கடுமையான குரலில்.
அவன் ஏதோ யோசனையுடன் பெருமூச்சு விட்டான்.
"ஏன் சார், நீங்க ப்ளூ பிலிம் எல்லாம் பார்ப்பீர்களா?"
நான் சற்று திடுக்கிட்டேன்.
"ஏன் கேட்கிறீங்க?"
"இல்ல, சில பேர் ப்ளூ பிலிம் எல்லாம் பார்ப்பாங்க. ஆனால் இங்க வரதமட்டும் கேவலமாக பேசுவாங்க. நீங்க ப்ளூ பிலிம் பார்க்கும்போதே உங்க கற்பு அழிந்து விடும். உடலளவில் மட்டும் தான் நீங்க சுத்தமாக இருப்பிங்க. என்ன சொல்றீங்க?"
யப்பா... ஆளாளுக்கு தங்களுக்கு ஏற்ற மாதிரி நியாயங்கள் வைத்திருக்காங்கப்பா! எனக்கு இந்த வாதத்தை மறுபடி ஆரம்பிப்பதில் ஆர்வமில்லை. பேச்சை மாற்றினேன்.
"ரகு இரண்டு பேரைத்தானே புக் பண்ணியிருந்தான். மற்றப் பெண் வந்தாங்களா?"
அவன் சடாரென எழுந்தான். "இதோ வந்திட்டாங்க"
ஒரு பெண் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள். சேலை அணிந்திருந்தாள். நடையில் ஒரு அவசரம் தெரிந்தது. அவள் எங்களை நெருங்க நெருங்க எனக்குள் எதோ உறைத்தது. இவள்...இவள்...
அவள் நேராக ரிசப்சன்காரனிடம் வந்தாள். இருவரும் எனக்கு கேட்காத தூரத்தில் ஒதுங்கினார்கள். அவள் ஏதோ கேட்பதும் அவன் உதட்டை பிதுக்கிக் கொள்வதும் தெரிந்தது. பின் அவன் ஏதோ சொல்ல அவள் திரும்பி என்னைப் பார்த்தாள்.
இவள்...இவள்...யார் இவள்? எங்கேயோ இவளைப் பார்த்திருக்கிறேனே?
அவள் திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். போகிறாளா?
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த ரிசப்சன் அருகில் வந்தான்.
"என்ன சார் பார்க்கிறீங்க, அவங்களைத்தான் உங்களுக்கு புக் பண்ணியிருந்தது. நீங்கதான் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே !"
ஐயோ, இவளா? அழகாகத்தான் இருக்கிறாள். ஒரு நிமிடம் என் மனது சபலப் பட்டாலும் அதை விட இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது.
"இவங்க எந்த ஊர்?" என்றேன். அவன் தன் முகத்தில் சந்தேகக் குறியுடன் என்னைப் பார்த்தான்.
"ஏன் கேட்கிறீங்க?"
"சும்மாதான். எப்படித்தான் மனம் வந்து இந்தத் தொழிலில் இறங்குகிறார்களோ..."
அவன் மறுபடியும் என்னருகில் அமர்ந்தான்.
"சார், இந்த மாதிரி பொம்பிளைகளுக்கு இந்தத் தொழில் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கு. முக்கியமா பணம்தான். குறைந்த நேரத்தில் நிறைந்த பணம். சே...! பேசாம பொம்பிளையாகப் பொறந்திருக்கலாம்!"
"இப்ப வந்தவங்களப் பற்றி தெரியுமா? ஏன் அவங்க வந்தாங்க?"
"அவங்களா? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்க புருஷன் கலியாணத்திற்கு அப்புறம் வேலைக்கு போக விடவில்லையாம்... அத்தோட தன் வீட்டுக் காரங்களுக்கு உதவி செய்யவும் விடுறதில்லையாம். அதனால் தன் தங்கச்சிகளின் படிப்புக்கு காசு வேண்டும் என்று புருஷனுக்குத் தெரியாம இங்க அப்பப்ப வந்து போவாங்க...."
எனக்கு அவனிடம் அவளைப் பற்றி கூடுதல் விபரங்கள் அறிய ஆவலாய் இருந்தாலும் அவனுக்கு என் மேல் சந்தேகம் வரலாம் என்பதால் விட்டுவிட்டேன்.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் ரகு ஆற அமர வந்தான். முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை தெரிந்தது.
வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். ரகு ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். ஆனால் எனக்கு அந்தப் பெண் யார் என்பதிலேயே கவனம் இருந்தது. அவளை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறோம். ஆனால் எங்கே?
எங்கள் அலுவலகம் வந்தவுடன் ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினோம். ரகு பர்சைத் திறந்து காசைக் கொடுத்தான். மை காட்!
எனக்கு பளீரென முகத்தில் அறைந்தது அது. இவன் பர்சில் இருக்கும் போட்டோவில்தான் அவளது முகத்தை பார்த்திருக்கிறேன். அப்படியென்றால்...
அது ரகுவின் மனைவி!
"என்னடா, அப்படியே சிலை போல நிற்கிறாய்?" பைக்கை எடுத்துக் கொண்டு வந்த ரகு கேட்டான்.
"ஒ...ஒன்றுமில்லடா..." திணறினேன். ரகு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். பின்னால் ஏறிக் கொண்டேன்.
"என்னடா, ஏதாவது பிரச்சனையா?"
ஏதோ தீர்மானித்தவனாக தலையாட்டினேன்.
"இல்லடா. நீ சொன்னதப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீ சொன்னது சரிதான். எந்தத் தப்பும் யாருக்கும் தெரியாதவரைக்கும் யாருக்குமே துன்பம் இல்ல!"


*******************

Saturday, October 25, 2008


கலக்கல் ஓவியங்களுக்கு நீங்கள் உடனடியாக நாடவேண்டிய இடம்...

http://brunotynbd.blogspot.com/

Tuesday, September 30, 2008

நாநீகள்...!

இறுகிய இதயங்கள் நொறுக்கும்
இளகிய இதயங்கள்...


பெரும் தொகைக்கு மகனை விற்று
சிறு தொகைக்கு மருமகன் வாங்கும்
வலி ஒலி நாமம் கொண்ட
முன்னாள் முதிர்கன்னிகள்...


போட்ட முதலுக்கு போணியாகாவிட்டால்
போட்ட தண்டச் சோற்றை வாந்திஎடுக்கச் சொல்லும்
முன்னாள் தண்டச் சோறுகள்...


'அடி'மைத்தனத்தை போதிக்கும்
பிழைக்கும் கலையை
பிழையில்லாமல் கற்றுத்தரும்
பிழைக்கத் தெரியாத
முன்னாள் எருமைமாடுகள்...


ஒரு துளி வியர்வை இல்லாமல்
ஒய்யாரமாய் சொர்கத்தில் இருந்து கொண்டு
பாலைவன உலகில் பச்சத்தண்ணி கூடத் தராமல்
தினமும் கூசாமல் ஆராதனைக் கப்பம் கேட்கும்
எம் முன் வரக் கூடத் தெம்பில்லாத
பயந்தாங்கொள்ளி ரவுடிகள்...


இவ்வார்த்தைகளின் வலியைக் கூட
புரிந்து கொள்ள முடியாமல்
கலாச்சாராய போதையில் மிதக்கும்
வயிற்றடிமைகள் நாநீங்கள்...


இந்த இறுகிய இதயங்கள் நொறுக்கும்
இளகிய இதயங்கள்...
உடைந்து போகும்
எதையுமே தாங்க இயலாத
'அப்பாவி' அப்பள இதயங்கள்....
அவையும் நாநீங்கள்...!

Tuesday, July 8, 2008

அதிசய உலகில் அலைஸ


Translation of ' ALICE IN WONDERLAND' -The great children novel written by Lewis Carroll

முயல் குழிக்கு கீழே...
அலைசிற்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு நேரம்தான் அந்த ஆற்றங்கரையோரமாக தன் சகோதரியின் பக்கத்தில் சும்மாவே அமர்ந்து கொண்டிருப்பது? அக்கா வசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கூட ஓரிரு தடவை எட்டிப் பார்த்து விட்டாள். அதில் ஏதும் படங்களோ அல்லது குறைந்தது உரையாடல்கள் கூட இல்லை. 'இதெல்லாம் ஒரு புத்தகமா? படங்களோ உரையாடல்களோ இல்லாமல்...?'அலைஸ் மனதிற்குள் அலுத்துக் கொண்டாள்.




அன்றைக்கு வெயில் வேறு கொளுத்திக் கொண்டிருந்ததினால் அவளுக்கு எல்லாவற்றிலும் எரிச்சலாகவே இருந்தது. தன்னருகில் நின்றிருந்த செடியில் பூத்திருந்த காட்டுப் பூக்களை பறித்து மாலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறு அதன் அருகில் சென்று மலர்களை பறிக்க ஆரம்பித்த போதுதான் திடீரென சிகப்பு கண்களுடன் வெள்ளை முயல் ஒன்று அவளருகில் ஓடுவதை கண்டாள்.
அடுத்து நடந்தது ஒரு அதிசயம்தான். ஆனால் அலைசிற்கு அது உறைக்கவே இல்லை. அது ஏதோ சாதாரண நிகழ்வு போலத்தான் அவளுக்குத் தோன்றியது. ஏனெனில் அந்த முயல் தனக்குள்ளே 'ஐயோ..ஐயோ...நான் பிந்தக்கூடாது...!'என்று சொல்லிக் கொண்டது அவளுக்கு கேட்டது. (அவள் இதைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தான் அதற்காக அந்நேரம் ஏன் ஆச்சரியப் படவில்லை என்று வியந்திருக்கிறாள். ஏனெனில் அப்போது அதனை கேட்பது ஒரு இயற்கையான சம்பவம் போலத் தோன்றியது)


ஆனால் அந்த முயல் தன் சட்டையின் இடுப்பு பையிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்து பார்த்து விட்டு அவசர அவசரமாக பாய்ந்து ஓட ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவத்தின் வினோதம் அவளுக்கு சுரீரென உறைத்தது. 'இது எப்படி நடக்க முடியும்? ஒரு முயலாவது கடிகாரம் பார்ப்பதாவது...! ' மனது முழுதும் ஆச்சரியங்கள் வெள்ளமென பாய, அதனை பின் தொடர்ந்து அந்த வயலுக்குள் பாய்ந்து ஓடத் தொடங்கினாள். அதிஷ்டவசமாக அந்த முயல் ஒரு புதருக்குள் இருந்த ஒரு பெரிய முயல் குழிக்குள் பாயும் கடைசித் தருணத்தில் அதைக் கண்டுவிட்டாள்.


அவள் அதனை நெருங்கியபோது அது ஒரு பெரிய சுரங்க வழி போல உள் நோக்கி செல்வதைக் கண்டால். குனிந்து அதை பார்த்தவள் திடீரென அதற்குள் விழுந்துவிட்டாள். நேராக சென்ற அந்த சுரங்க வழி திடீரென சரிந்து ஒரு பெரிய கிணறு போன்ற ஒரு பள்ளமாகியது. அவள் நடக்கப் போவதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் மிக மிக மிக ஆழமான அந்தப் பள்ளத்திற்குள் விழத் தொடங்கினாள்.


அந்த பள்ளம் மிக மிக ஆழமாக இருந்ததாலோ அல்லது அவள் மிக மெதுவாக விழுந்து கொண்டிருந்ததாலோ என்னவோ விழுந்துகொண்டிருக்கும்போதே அவளால் தன்னை சுற்றி பார்க்கவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்கவும் நன்றாகவே நேரம் இருந்தது.
முதலில் அவள் கிழே குனிந்து பார்த்து தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிய முயற்சித்தாள். ஆனால் கீழே மிகவும் இருட்டாக இருந்ததால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பின் அவள் அந்த கிணற்றின் இரு பக்கங்களையும் பார்த்தபோது அவற்றில் பல அலுமாரிகளும் புத்தகத் தட்டுகளும் இருப்பதைக் கண்டாள். ஆங்காங்கே சில வரைபடங்களும் படங்களும் தொங்குவதை அவதானித்தாள். அவள் தன்னருகில் வந்த ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து பார்த்தாள். அதில் 'ஆரஞ்சு பழச்சாறு' என எழுதப் பட்டிருந்தது. ஆனால் அது வெறுமையாய் இருப்பதை பார்த்து பெரிதும் ஏமாற்றமடைந்தாள். ஆனால் அந்த குடுவையை கீழே போட அவள் விரும்பவில்லை. ஏனெனில் அது யார் மேலாவது அவர்கள் இறந்துவிடுவார்களோ என்று பயந்தாள். எனவே விழுந்து கொண்டிருக்கும்போதே அதனை இன்னொரு அலுமாரித் தட்டில் ஒருமாதிரியாக சமாளித்து வைத்து விட்டாள்.


இப்படி அவள் விழுந்து கொண்டிருக்கும் போது தன் வீட்டை நினைத்துக் கொண்டால். இனி நான் என் வீட்டுப் படிகளில் விழுந்தால் கூட பயப்படமாட்டேன். இனி என்னை வீட்டில் எவ்வளவு வீரமானவள் எனறு நினைப்பார்கள். ஏன் இனி வீட்டுக் கூரையிலிருந்து விழுந்தால் கூட நான் பயப் படமாட்டேன். ( அது உண்மை போலத்தான் தோன்றியது.)

கீழே...கீழே...கீழே....விழுந்துகொண்டே இருந்தாள். அவளது விழுகை ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. "இந்நேரத்திற்கு நான் எவ்வளவு கிலோமீற்றர்கள் விழுந்திருப்பேன்...?"அவள் வாய் விட்டு கேட்டுக் கொண்டாள். 'இப்போது நான் அனேகமாக பூமியின் நடுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பேன் எனறு நினைக்கிறேன். சரி எண்ணிப் பார்ப்போம்...பூமியின் நடுப் பகுதி தரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் ஆழத்தில் இருக்கிறது. நான் நினைக்கிறேன்...( பாருங்கள்...அலைஸ் இந்த மாதிரி நிறைய விடயங்களை தன் பாடசாலைப் பாடங்களில் படித்திருக்கிறாள். ஆனால் தன் அறிவை சொல்லி பெருமையடித்துக் கொள்ள இது சரியான நேரமும் இல்லை. அத்துடன் சொன்னால் கேட்பதற்கு கூட அங்கு யாருமில்லை. இருந்தாலும் அதை கணித்து பார்த்துக் கொள்ளுவது அவளுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது. 'ஆமாம், அவ்வளவு தூரமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது அகலாங்கா... அல்லது நெட்டாங்கா என்று தெரியவில்லையே...! ( உண்மையில் அகலாங்கு, நெட்டாங்கு என்றாலே அவளுக்கு என்னவென்று தெரியாது. ஆனால் பெரியவர்கள் போல அதனை சொல்லிக்கொள்ள விரும்பினாள். )


இப்போது அவள் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள். 'நான் அப்படியே பூமியின் நடுப்பகுதியால் துளைத்துக் கொண்டு சென்று அதன் மறு பக்கத்திற்கு போகப் போகிறேன் என்று நினைக்கிறேன். அங்கே தலை கீழாக நடந்து கொண்டிருக்கிற மக்களுக்கு நடுவில் நான் தலை கீழாக போய் நிற்பேன்! எவ்வளவு வேடிக்கையாய் இருக்கும்! ஆனால் 'மாண்புமிகு' கடவுளே...!(இப்போது யாரும் பக்கத்தில் இல்லாதது நல்லதாகப் போய்விட்டது. அது சரியான சொல்தானா என்று தெரியவில்லை!) அங்கே போனவுடன் அங்கே இருக்கும் மக்களிடம் அது என்ன நாடு என்று கேட்க வேண்டும். 'அம்மா...தயவு செய்து இது என்ன நாடு என்று சொல்வீர்களா?' அவள் ஆலயத்தில் முழந்தாளிட்டு மன்றாடுவது போல அப்போதும் முழந்தாளிட முயற்சித்தாள். அந்தரத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது முழங்தாள்படியிடுவதை கற்பனை பண்ணிப் பாருங்கள். உங்களால் செய்ய முடியுமா? ) ஆனால் அப்படிக் கேட்டால் என்னை ஒரு லூசுப் பெண் என்றுதான் நினைப்பார்கள்.யாரிடமும் கேட்கக் கூடாது. எங்காவது அதை எழுதியிருப்பார்கள். அங்கே வாசித்துக் கொள்ளலாம்.


கீழே...கீழே...கீழே...போய்கொண்டேயிருந்தாள். அவளுக்கு செய்வதற்கும் ஒன்றுமில்லை. எனவே மீண்டும் தனக்குத்தானே பேச ஆரம்பித்தாள். 'தினா இன்றிரவு நான் இல்லாமல் மிகவும் கஷ்டப் படபோகிறாள். ( தினா அவளது பூனை.) இன்றைக்கு தேநீர் வேளையில் அவர்கள் அதற்கு பால் கொடுக்க மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ, என் செல்லகுட்டி தினா! நீயும் என்னுடன் விழுந்திருக்கலாம்! ஆனால் இங்கே இந்த அந்தரத்தில் ஒரு எலியும் இல்லையே...ஆனால் நீ வெளவால்களை பிடித்து சாப்பிடலாம்! அவையும் கிட்டத்தட்ட எல்லிகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா? தெரியவில்லையே...! இப்போது அவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. தூக்கக் கலக்கத்தில் உளற ஆரம்பித்தாள். 'பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...' சில நேரங்களில் 'வெளவால்கள் பூனைகளை சாப்பிடுமா?' உண்மையில் எப்படி மாற்றிக் கேட்டாலும் அந்த இரண்டு கேள்விகளுக்குமே விடை அவளுக்கு தெரியவில்லை. இப்போது அவள் ஒரு அரைகுறைத் தூக்கத்தில் ஒரு அரைகுறை கனவு காண ஆரம்பித்தாள். அவள் தன் தினாவின் கையை பற்றியவாறு நடந்து கொண்டே அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கிறாள். ' தினா, உண்மையை சொல்லு. நீ எப்போதாவது வெளவால் சாப்பிட்டிருக்கிறாயா?' ஆ..!தொம்ப் ..தொம்ப்..அவள் காய்ந்த சருகுகள்,குச்சிகள் கிடந்த ஒரு குவியலில் விழுந்திருந்தாள். அப்பாடி, ஒரு வழியாக அவளது விழுகை முடிந்துவிட்டது.
அலைசிற்கு சின்னக் காயம் கூட ஏற்படவில்லை. விழுந்த அடுத்த கணமே துள்ளி எழும்பிவிட்டாள். மேலே பார்த்தாள். ஆனால் மேலே முழு இருட்டாக இருந்தது. இப்போது அவளுக்கு முன்னால் இன்னொரு சுரங்கப் பாதை இருந்தது. அந்த வெள்ளை முயல் அந்தப் பாதையால் ஓடுவதைக் கண்டாள். இனி ஒரு கணமும் தாமதிக்க முடியாதென உணர்ந்தாள். காற்றுப் போல பாய்ந்து அதன் பின்னால் ஓடினாள். அது ஒரு வளைவில் திரும்பும் போது அது தனக்குள் ' ஐயோ...எவ்வளவு பிந்திவிட்டது...!'என்று சொல்லிக் கொள்வது அவளுக்கு கேட்டது. ஆனால் அந்த வளைவில் அவள் திரும்பி பார்த்த போது அதைக் காணவில்லை. ஆனால் அவள் முன்னால் நீளமான ஒடுக்கமான வராண்டா ஒன்று விரிந்திருந்தது.




அந்த வராண்டாவின் இரு பக்கங்களிலும் நிறைய கதவுகள் காணப்பட்டன. ஆனால் அவை எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அலைஸ் அந்தப் பள்ளமாய் சரிந்து சென்ற அந்த வராண்டாவின் எல்ல்லாக் கதுவுகளையும் போகும்போது தள்ளி தள்ளிப் பார்த்துக் கொண்டே சென்றாள். எந்த ஒரு கதவும் திறக்காமல் போகவே, சோர்ந்து போய் அப்பாதையின் நடுப் பகுதியால் நடக்க ஆரம்பித்தாள். இதை விட்டு எப்படி வெளியேறப் போகிறேன்?
திடீரென தன் பாதையின் முன்னால் ஒரு மூன்று கால் மேசை இருப்பதை கண்டாள். அது முழுவதும் உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரே ஒரு சிறிய தங்கத் திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. இந்த திறப்பு நிச்சயமாக அந்த வராண்டவிலுள்ள ஏதாவது ஒரு கதவின் திறப்பாகத்தான் இருக்கும் என்று அவள் முதலில் நினைத்தால். ஆனால் ஐயோ பாவம்! ஒன்று பூட்டு மிக பெரிதாக இருந்தது அல்லது திறப்பு மிக சிறிதாக இருந்தது. ஒரு கதவும் திறக்கவில்லை.ஆனால் அவள் அதை இரண்டாவது தடவை சுற்றி வந்த போது திரைச்சீலை ஒன்றைக் கண்டாள். முன்பு அதை அவள் கவனிக்கவில்லை. அதன் பின்னால் ஒரு பதினைந்து இன்ச் உயரமான கதவு இருந்தது. அதில் அந்த தங்கத் திறப்பை நுழைத்து பார்த்தால். என்ன ஆச்சரியம்...அது திறந்து விட்டது!
அலைஸ் அக்கதவை திறந்து பார்த்தாள். அதன் உள்ளே இன்னொரு சிறிய பாதை ஒன்று ஆரம்பித்திருந்தது. அது ஒரு எலி பொந்தை விட மிக சிறிதாகத்தான் இருந்தது. அவள் குனிந்து அந்தப் வழியால் பார்த்தபோது அதன் முடிவில் மிக மிக அழகான தோட்டம் ஒன்று இருப்பதைக் கண்டாள். அதன் அபார அழகில் அவள் மயங்கிப் போனாள். அவள் எவ்வளவிற்கு அந்த இருட்டரையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஏங்கினாளோ அதை விட அந்தத் தோட்டத்திற்குள் போகவேண்டும் எனவும் அதன் மலர்ப் படுக்கைகளை தொட்டு பார்க்கவும் ஏங்கினாள். அனால் அவளால் தன் தலையைக் கூட அதனுடாக நுழைக்க முடியவில்லை. ஐயோ...நான் இந்தத் தோள்கள் இல்லாமல் பிறந்திருக்கலாம்... அல்லது இந்தக் கண்களுக்கு தொலைநோக்கி போல தூரத்தில் இருப்பவற்றை தெளிவாகப் பார்க்கும் சக்தி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...! ஆனால் பொறு, எதற்கும் ஒரு வழி இல்லாமல் போகாது. எதற்கும் ஒரு ஆரம்பம் என்று ஒன்று இருக்கும். அந்த ஆரம்பத்தை கண்டு பிடித்தால் போதும்...அவள் நினைத்தது சரிதான். எந்தவொரு பிரச்சனையின் முதல் முடிச்சை அவிழ்த்தால் போதும். மீதி தானாகவே அவிழ்ந்துவிடும். அதனால் எந்த சாத்தியப்படாத சாதனையையும் சாத்தியமாக்கிவிடலாம்.




அந்த சிறு கதவுக்கு பக்கத்தில் அப்படியே நிற்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அவள் மறுபடியும் அம்மேசையை நோக்கிச் சென்றாள். வேறு ஒரு திராப்பு அல்லது இப்படி மூடிய கதவிற்குள் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்ற, எப்படி வெளியேற வேண்டும் என விளக்குகின்ற புத்தகம்போன்று ஏதாவது கிடைக்காதா என்ற அறை நம்பிக்கையுடன்தான் சென்றால். இந்தத் தடவை அங்கெ ஒரு சிறிய போத்தல் இருந்தது. (நிச்சயமாக முன்பு அது அங்கெ இருக்கவில்லை என்று அவள் சொல்லிக் கொண்டால்) அப்போத்தலின் கழுத்தை சுற்றி ஒரு பேப்பர் சுற்றியிருந்தது. அதில் மிக அழகாக பெரிய எழுத்துகளில் 'என்னைக் குடி' என்று எழுதப்பட்டிருந்தது.
அது சரி. என்னைக் குடி என்று அது இலகுவாக சொல்லிவிடலாம். அதற்காக உடனே ஏமாந்து பொய் நமது குட்டிப் புத்திசாலி பெண் அதைக் குடித்துவிட மாட்டாள். ம்கூம்...நான் இது நஞ்சா இல்லையா என பரிசோதிக்கவேண்டும்...அப்படி ஏதும் எழுதப்பட்டிருக்கிறதா என பார்த்தால். இப்படி எத்ததனை கதைகள் அவள் வாசித்திருப்பாள். இந்த மாதிரியான நேரங்களில் அவசரப்பட்டு ஏதாவது செய்தால் பூதங்கள் போன்ற ஏதாவது மறைந்திருப்பவை வெளியே வந்து என்னைக் கடித்து சாப்பிட்டு விடும். அதிலும் இது நஞ்சாக இருந்தால் நான் அதோ கதிதான்.
ஆனால் அதில் எந்த இடத்திலும் நஞ்சு என்று எழுதப்பட்டிருக்கவில்லை. எனவே அலைஸ் அதனை சற்று சுவைத்துப் பார்த்தால். அப்பா..அது மிக மிக சுவையாய் இருந்தது. அது ஆப்பிள் ஆரஞ்சு அன்னாசி வாழைப்பழம் என பலவகையான பழங்களின் சாறு கலந்தது போன்ற சுவையாய் இருந்தது. அவள் அதை ஆவலுடன் மட மடவென உறிஞ்சிக் குடித்துவிட்டாள்.
.............................
................................
....................................!
' என்ன ஒரு வினோதமான உணர்வு...!' என்று சொல்லிக்கொண்டாள். நான் இப்போது ஒரு தொலைநோக்கி கருவி அளவு சிறியவளாய் இருந்தால் எப்படி இருந்திருக்கும்?'
உண்மையில் அதுதான் நடந்தது. அவள் அப்படி நினைத்த மறுகணமே அவளது உருவம் மிகச் சிறியதாக மாறியது. அவள் இப்போது வெறும் பத்து இன்ச் உயரமே இருந்தாள். அந்த அழகான தோட்டத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் கதவிற்கு அளவாக தன் உயரம் மாறிவிட்டதை கண்டதும் சந்தோசத்தில் அவள் முகம் பிரகாசமாகியது. எனினும் இதில் ஏதும் ஆபத்து மறைந்திருக்குமொஎன்று சில நிமிடங்கள் யோசித்தால். இதனால் அவள் சற்று மனமும் தளர்ந்தால். 'இது கடைசியில் எப்படி முடியுமோ?' தனக்குள் கேட்டுக் கொண்டால். ' இந்த உருவத்துடநேயே நான் இந்த இடத்தை விட்டு வெளியேறினால் இதற்கு பிறகு எனக்கு என்னவாகும்? ஒரு மெழுகுதிரி போலத்தான் ஆகிவிடுவேன்!'ஒரு மெழுகுதிரி முழுவதுமாக எரிந்து முடிந்தவுடன் அது எந்த உருவத்தில் இருக்கும்?என்று அவள் யோசித்தால். அப்படி ஒரு உருவத்தை அவள் பார்த்ததாகவே ஞாபகமில்லை.
சற்று நேரம் கழிந்தும் தனக்கு எதுவும் இன்னும் ஆகவில்லை என்று கண்டவுடன் உடனடியாக அந்தத் தோட்டத்திற்குள் நுழையத் தீர்மானித்தால். ஆனால் பாவம் அலைஸ்! கதவை நெருங்கியபோதுதான் தான் அந்தத் தங்கக் திறப்பை எடுக்காமல் மறந்து பொய் வந்திருப்பதை உணர்ந்தால். ஆனால் அவள் அதை எடுப்பதற்காக மேசைக்கு சென்றபோது அந்த திறப்பு எட்ட முடியாத உயரத்திலிருப்பதைக் கண்டால். அந்த கண்ணாடி மேசையில் திறப்பு இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் நிறைய கடினப்பட்டு மேசைக்கால்களில் ஒன்றில் ஏற முயற்சித்தால்.ஆனால் அது மிகவும் வழுக்கியது. மறுபடி மறுபடி அதில் ஏற முயற்சித்து ஒரு கட்டத்தில் மிகவும் களைத்துப் பொய் பாவம் கிலே அமர்ந்து அழ ஆரம்பித்தால்.


"சரி,சரி...இப்படி உட்கார்ந்து அழுவதால் ஒன்றும் நீ சாதித்துவிடப் போவதில்லை...!" அலைஸ் தனக்குத்தானே அதட்டினால். "முதலில் நீ இந்த நிமிடத்தை மறந்து விடு. இதுதான் நான் உனக்கு சொல்லும் ஒரே அறிவுரை...!"அவள் பொதுவாகவே தனக்குத் தானே அறிவுரை குறிக் கொள்ளுவாள். . (ஆனால் எப்போதாவதுதான் அதை பின்பற்றுவாள்.) சில நேரங்களில் தன் கண்ணீர் விட்டு அழும் வரைக்கும் கூட தன்னைத் தானே மிகக் கடுமையாக திட்டுவாள். அவளுக்கு நன்றாக நாபகம் இருக்கிறது. இப்படித்தான் ஒரு தடவை தன்னையே எதிராளியாக வைத்துக் கொண்டு விளையாடிய ஒரு விளையாட்டில் தன்னையே ஏமாற்ற முயற்சித்ததற்காக தன் காதலி தானே வலிக்கும்படி திருகினால். இந்த விநோதப் பெண்ணுக்கு தன்னை இரண்டு ஆளாகப் பாவித்துக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது. "ஆனால் அதனால் இப்போது ஒரு பயனும் இல்லை...!"என்று நினைத்தால்."இப்போது பொறுப்பான ஒரு பெண்ணாக இருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது...!"
விரைவிலேயே அவள் பார்வை அந்த மேசையின் கீழே இருந்த ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியின் மேல் விழுந்தது. அதை திறந்து பார்த்த போது அதனுள் ஒரு மிகச் சிறிய கேக் இருந்தது.

Friday, July 4, 2008

A LESSON FOR TEACHERS


My dear Gods!

Please make aware of these phrases
Release your students from traditional prisons!
They are not machines with switches
clay to be made as pot or spoiled.
Students are not your slaves.
Small men like you with human rights.
You live in your world.
They live in their world.
Please understand their innocent worlds.
Children are not cattle
to be handled with cane.
They have their own dreams
to be become true.
Don't repeat your history to your students
painful experiences with your teachers...!

Sunday, June 29, 2008

I LIKE DARKNESS!


Darkness is a perfect filler of any vacuum not light!
It captures the earth under its rule every half day equally to the sun.
It does not give up its trying on day time too.
It hides itself as shade behind animate and inanimate objects!
If the sun attempts to eliminate it,
it can not achieve it completely.
If men run too, it will follow them as a spy
till its winning time comes.
People also like to rest under the shadow of darkness
to escape from the light man.
Nobody can destroy it at night. Let's light a lamp.
It would be under the lamp too!
Look at moon, the friend of darkness.
It has darkness one side fully and also
has some darkness on facing side to the earth.
So, it is a dark moon not bright!
Darkness of night gives resting period to tired people.
If there is no darkness,
nobody would have known existence of light and
there is no value to light.
There is no imaginative power on day world, but
numerous new dreaming worlds are born in darkness.
We are born from darkness of our mother's womb.
We are going to stay permanently in darkness of tomb.
Above all, after thousands and thousands years,
there will be no sun, but darkness will last forever...
So, I do the heading!

MY BELOVED ENEMY


Who are you? Why do you oppose me?
I couldn't know clearly you.
your body has been twisted round
By a boa of religiousness,
Throw it!
Your legs have been bound
with a chain of racism,
Remove it!
Your face too has been hidden
by a cap of traditionalism,
Take off it!
Your hands have been bound
By a rope of patriotism,
Leave it!
Aha! You also have one lovable heart
And a hunger stomach!
So, you are are a man like me! Then,
Why are you against me? come with me!
Let's create a new world!

Saturday, June 28, 2008

THE WAVES OF MEMORIES

My memories about you

Give pleasure


And pain too!


I decide to forget you


Definitely and


Daily!

FACE

We face various situations by our face!
Our face makes different faces of others.
Smile face creates peaceful and happymood.
Sad face produces sorrowful and regretful mind.
Attractive face gains all goals.
Ugly face loses his friends and foes too!
Face is the mirrror of our emotions.
Face determines our future.
Face of child gives more hopes to live.
Face of god was made to give hopes after death!

LOVE

Love is a selfishness,
when it is used to use others for our needs
Love is a patriotism,

when it is used to fight for the nation.
Love is a devotion,
when it is used to worship god.
Love is a trade,
when it is used to gain more advantage.
Love is an agreement,
when it is used to found a marriage.
Love is love, only
when it is used to love others...!

GOD! WHERE ARE YOU?


Why do you fear to face our faces?
why do you prefer to stay far away us?
Don't you like the world, created by you?
don't you love us, produced by you?
why did you create the good with the bad?
why did you make angels with devils?
didn't you familiar our strength with our weakness?
didn't you understand our body with a stomach?
why will you visit again to our world?
why will you punish us according to your law?
won't you know that our world is not like yours?
won't you learn that our sins are yours?

ENJOY YOUR LIFE


Without your permission
a life has been given you!
without your knowledge
it is going to fly away!
you don't know
where you came from and
where you are going!
you are hungry, eat well!
whatever your hunger is !
you face some situations
handle them happily!
whatever situation is
don't listen to foolish rules!
do what you like
If it is not harmful to others!
who are you? basically a man,
a part of animal kingdom!

என்னை விடவும்

என்னை விடவும் இந்த உலகத்தில்
எவனும் உயர்ந்தவன் எவனும் இல்லை...
உங்களை விடவும்தான்...!

மற்றவர்கள்

மற்றவர்கள் தங்கள் பிழைகளை ஏற்றுகொள்ள வைப்பதற்கான ஒரே சிறந்த வழி...நம் பிழைகளை நாம் ஏற்றுக் கொள்ளுவதுதான்...!

நாங்கள் நேர்மையானவர்களா....?

நாங்கள் நேர்மையானவர்கள் இல்லை....!
அதனால் நம் கடவுளும் நேர்மையானவர் இல்லை ...!


ஏனெனில் ...


தாயைப் போல பிள்ளை ,
கடவுளை போல மனிதன்...!

Tuesday, June 24, 2008

நீங்கள் நல்லவரா?

சத்தியமாக ஆம் என்பீர்கள். ஆனால் நீங்கள் நல்லவர்தானா என்று உங்களுக்குத் தெரிந்த எவரிடம் கேட்டாலும் ஆம் என்று சட்டென ஒப்புக்கொள்ள தயங்குகிறார்களே...அது ஏன்? அவ்வளவு ஏன்...உங்கள் அடிமனதில் உங்களுக்கே அதில் சந்தேகம் இருக்கிறதே... அப்படிஎன்றால் நீங்கள் உண்மையிலேயே நல்லவரா...கெட்டவரா...? உடனே 'நாயகன்' கமலக்ன் மாதிரி "தெரியலியே...!" எம்று இழுக்காதீர்கள்.
சரி, இந்த உலகத்தில் வேறு யாராவது நல்லவர்கள் இருக்கிறார்களா? (உங்களை தவிர! ) பொதுவாகவே நாம் நம்மைத்தவிர மற்றவர்களை நல்லவர்கள் என்று ஒப்புக் கொள்ள தயக்கம் காட்டுகிறோம். நாம் நல்லவர்கள் என்று ஒப்புக் கொள்ளும் நபர்கள் சிலரை எண்ணிப் பாருங்கள். மகாத்மா காந்தி, புத்தர், இயேசு... ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட நல்லவர்களிடம் ஒரு நாளும் உங்களுக்கு நேரடியான பழக்கம் இருந்திருக்காது. புராணக் கதைகளில், பத்திரிகைகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.உடனே " அது சரி...அவர்களெல்லாம் மகான்கள்...மகான்கள், மகாத்மாக்கள் இருந்ததெல்லாம் அந்தக் காலம்...இந்தக் காலத்தில் எல்லோரும் கள்ளன்கள்...மற்றவர்களை எப்படி ஏமாற்றி பிழைக்கலாம் என்று திரிகிறார்கள்..." என்பீர்கள். ஆனால் உங்களுக்கு மேற்படி மகான்களிடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களிடமும் ஏதாவது பிழை கண்டு பிடித்திருப்பீர்கள்! அதுதான் உண்மை!
சரி குழம்ப வேண்டாம், உண்மையில் யார் நல்லவன்? யார் கெட்டவன்? நல்லவன் என்று ஒருவனுமில்லை. கெட்டவன் என்றும் ஒருவனுமில்லை. இந்த ஹீரோ , வில்லன் என்பதெல்லாம் கதை சுவாரசியத்திற்காக படைக்கப்பட்டவை. உண்மையில் ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஹீரோவும் ஒரு வில்லனும் மறைந்து இருக்கிறார்கள்...ஆம்...கசப்பாய் இருந்தாலும் அதுதான் உண்மை...!

Saturday, June 21, 2008

ஏதாவது எழுத...

ஏதாவது எழுத வேண்டுமென ஆசைப்படுகிறேன். ஒன்றும் முடியவில்லை. முன்பெல்லாம் நிறைய கற்பனைகள், கதைகள், கவிதைகள் என்று மனதில் குவியும். சிலதை எழுத்திலும் எழுதிவிடுவேன். ஆனால் வெளியிடுவதற்கு எவனும் தயாராய் இருக்க மாட்டான். ஆனால் இப்போது எவ்வளவு எழுதிக் குவித்தாலும் எப்போது கொடுத்தாலும் ஏன் 'என்ன' கொடுத்தாலும் (!) வெளியிடுவதற்கு தயாராய் இருக்கும் ஒருவன் கிடைத்தும் எழுத முடியவில்லை. ஏதாவது எழுத நினைத்தால் அதையெல்லாம் யாரோ முன்பே எழுதி விட்டது போல தோன்றும். அல்லது நான் எழுத நினைக்கும் கருத்துக்கு எதிராகவே எனக்குள்ளேயே பல கருத்துகள் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன எழுதி கிழித்து விடப் போகிறாய்...அல்லது என்ன புதுமையான விஷயத்தை நீ சொல்லப் போகிறாய் என விரல் நீட்டுகின்றன.


சில நேரங்களில் அதிகம் படித்தால் மூளை குழம்பி விடும் என்பார்கள். அதே போல அதிகம் வாசித்தால் எந்தக் கருத்து சரி எது பிழை என்பது புரியாமல்
போய்விடுமோ? உதாரணமாக கடவுள் இல்லை என்று எழுத ஆசைப்படுகின்றேன். ஆனால் ஏதோ ஒன்று பின்னால் நின்று கையை இழுத்து தடுக்கிறது. என்ன அது? சின்ன வயதிலிருந்தே எனக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் கடவுள் பயமா? அல்லது எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை எதிர்ப்பதற்கு தயக்கமா? வட்டத்திலிருந்து வெளியே வந்தால் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற பயமா?அல்லது உண்மையிலேயே என் கருத்தில் எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்பதாலா? அல்லது...அல்லது...அந்தக் கடவுளே தடுக்கிறாரோ...?!


ஐயோ...குழப்பம்...குழப்பம்...மஹா குழப்பம்...ஆனால் ஒன்று ...எவருமே தாங்கள் அடித்துச் சொல்லும் கருத்தில் ஒரு பத்து வீதமாவது அடிமனதில் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இக்கருத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...!

கடவுள் இருக்கிறாரா ...இல்லையா...? உலகத்திலேயே மிகப் பழமையான வாதப் பிரதிவாதம் இதுவாகத்தான் இருந்திருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை அடித்துச் சொல்ல என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் மிகச் சத்தியமாக அடித்துச் சொல்கிறேன். அப்படி ஒருவர் இருந்தால் முதன் முதலில் நரகத்தில் தள்ளப்பட வேண்டிய நபர் அவர்தான் ! எனக்கு கடவுளை பிடிக்காது. எங்களை நல்லவனாக இரு இரு என்று சொல்லிக்கொண்டே இருக்கிற தவறெல்லாம் அவர்தான் செய்திருக்கிறார், செய்து கொண்டு இருக்கிறார். உங்களிடம் எனக்கென்ன பேச்சு...? நான் கடவுளிடமே நேரடியாக கேட்டு விடுகிறேன் . கடவுளே...உண்மையிலேயே நீர் இருந்தால் இந்த எழுத்தெல்லாம் உம் முன் வாசிக்கப்படும் தானே...என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்... நீர் தெரிந்தோ தெரியாமலோ கடவுளாகி விட்டீர். அல்லது கடவுளாகவே இருக்கிறீர். இந்த அளவில்லாத சக்தி எப்படி உமக்கு கிடைத்தது ...எங்கிருந்து கிடைத்தது. ...உமக்கு எப்படி ஆதியும் அந்தமும் இல்லாமற் போகும்...என்பது போன்ற உமது சொந்த விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் எங்கள் உலகத்தை நீர்தான் படைத்தீராம்...அதை ஆள்கிறீராம்...நிறைய விதிகள் கட்டுபாடுகள் எல்லாம் விதிக்கிறீராம்...கடைசியில் நீதிமன்றம் எல்லாம் வைத்து எங்களுக்கு தண்டனை வேறு கொடுக்கப் போகிறீராம். இப்படியெல்லாம் எங்கள் சொந்த விசயத்தில் நீர் தலையிடுவதால் உம்மிடம் நாக்குத் தெறிக்க ( என் நாக்கு தெறித்தாலும் பரவாயில்லை) நாலுகேள்வி கேட்கிறேன்... பதில் சொல்லும்...

உடனடி மகிழ்ச்சிக்கு...

ஹாய் ஹவ் ஆ யூ ? ஐ ஆம் இன் ஹப்பி மூட் நவ்...மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நம்புவீர்களா...? இதை எழுதுவதற்கு வந்து உட்கார சற்று முன்பு கூட நான் அவ்வளவு சந்தோஷ மூடில் இருக்கவில்லை. பின் இது எப்படி சாத்தியமானது? இசை...!இசை...!இசை...!ஹெட் போனுடாக என் காதினுள் பாய்ந்து கொண்டிருப்பது... 'பொல்லாதவன்' படத்தின் பொல்லாத ரி மிக்ஸ் 'எங்கேயும் எப்போதும்...' இசை வெள்ளம்... ஆகா... இந்த இசை தான் எப்படி ஒரே வினாடியில் நமது மனநிலையை மாற்றிப்போட்டு விடுகிறது...!
உடனடியாய் இசையை பற்றி ஒரு கவிதை வடிக்காவிட்டால் அதனால் இன்பம் பெற்றுவிட்டு அதனை ஏமாற்றிய ஒரு துரோகியாகிவிடுவேன்...இதோ... இதோ...
இசை...

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?