Friday, June 6, 2008

சுஜாதா எனும் வசியம்


ஹலோ, எப்படி இருக்கிறீங்க? கொஞ்ச நாளா எனக்கு மூட் அவுட்டுங்க...என் அபிமான எழுத்தாளர் சுஜாதா மறைந்துவிட்டார். சுஜாதாவின் பெருமைகளை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. சுஜாதாவின் சாதனைகளை அவர் இறந்த பிறகு பத்திரிகைகள் பட்டியலிடுகின்றன. தெரியாதவர்கள் அவற்றை வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் அவரின்
எழுத்தாற்றலை கண்டு வியக்க வேண்டும் என்றால் நீங்கள் அவரின் ஆக்கங்களை வாசித்தால்தான் முடியும். ஆனால் சுஜாதாவிற்கும் எனக்கும் இடையிலான இருந்த ஒரு உறவைத்தான் இங்கு சொல்ல விரும்புகிறேன். அது துரோணருக்கும் ஏககலைவனுக்கும் இடையில் இருந்த உறவு.


பொதுவாக இளமை பருவத்தில் இருப்பவர்கள் எதிர்ப்பாலை கனவில் காண்பார்கள். ஆனால் நான் நிறையத்தடவை சுஜாதாவைத்தான் கண்டிருக்கிறேன். அவ்வளவிற்கு அவர் என்னில் பாதிப்பு செலுத்தியிருக்கிறார்.
நான் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நேரில் சந்திக்க ஆசைப்பட்ட ஒரே எழுத்தாளர் அவர்தான். எங்காவது "சுஜாதா" என்கின்ற எழுத்துக்களை கண்டாலே அவற்றை விழுந்து விழுந்து படிக்குமளவு பைத்தியமாக இருந்தேன்.

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?