Saturday, April 19, 2008

நிலா

கவிஞர்களின் பரம்பரை சொத்து.
கதை சொல்லும் பாட்டிகளின்
கற்பனை சொர்க்கம்.
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வியலை கற்பிக்கும் ஆசான்.
பின் பக்கம் முழுதும் இருளும்
முன்பக்கம் சிறு சிறு இருட்டுகளும்
கொண்டிருந்தாலும் அதை மறைத்து
வெள்ளை நிலா என பெயரெடுத்த
கள்ள நிலா அது.
பலகோடி நட்சத்திர வைரங்களுடன்
பயமில்லாமல் பவனி வரும்
இரவின் ராணி அவள்.
இவளுக்குப் பயந்து ஆதவன் கூட
இரவில் வருவதில்லை...

Monday, April 14, 2008

உன் உயர்வை யாராலுமே தடுக்க முடியாது...உன்னைத்தவிர...!


உங்கள் சிந்தனைக்கு...!


உங்கள் நண்பன் உங்கள் எதிரியால் கொல்லப்படும்போது கவனமாக இருங்கள். அதற்காக நீங்கள் உங்கள் எதிரியை கொல்லும்போது நீங்களும் யாரோ ஒருவனின் நண்பனைத்தான் கொல்கிறீர்கள்....!

Saturday, April 12, 2008

பெண்கள்


பெண்கள்


யப்பா..! இவர்களைப் பத்தி பேசிப் பேசியே மாய்கிறார்கள்! அப்படி என்னதான் ஸ்பெஷல் இவர்களிடம் இருக்கிறது அப்படிப் பேசுவதற்கு? பெண் விடுதலை என்கிறார்கள். ஆணாதிக்கம் என்கிறார்கள். அடிப்படையில் அவை என்னவென்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் காவியங்களிலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்; ஒடுக்கப்பட்டாள் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் போட்டு முழங்கும் 'அறிவுஜீவிகள்' சற்று கவனமாக கோபப்படாமல் முக்கியமாக பதட்டப்படாமல் தொடர்ந்து வாசிக்கவும். ஏனென்றால் நானும் ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தவன்தான். தயவு செய்து தொடர்ந்து வரும் வசனங்களை ஆணாதிக்க வெறி பிடித்த ஒரு ஆடவன் எழுதுகிறான்; இவன் சொல்வதற்க்கெல்லாம் எப்படி எதிர்வாதங்கள் வைக்கலாம் என யோசித்துக்கொண்டே வாசிக்காதீர்கள். உங்கள் அப்பா (அதாவது உலகிலேயே உங்களுக்குப் பிடித்த ஆணாதிக்க வெறி இல்லாத ஒரே ஒரு நபர்) சொல்கிறார் என நினைத்துக்கொண்டு தொடருங்கள்.


உலகத்தில் பெண்கள் துன்பபடுகிறார்கள். ஏற்றுக் கொள்கிறேன். அப்படியென்றால் ஆண்கள்? சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்களா?இல்லைத்தானே? அப்படியிருக்க ஏன் பெண்கள் மட்டும் தாங்கள் துன்பப் படுவதை தூக்கிப் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்? சரி, ஆண்களால்தான் பெண்களுக்கு நிறையத் துன்பம் என்று சொல்லப் போகிறீர்கள். அப்படியென்றால் பெண்களால் ஆண்களுக்கு துன்பமே வந்ததே இல்லையா? அதற்காக எப்போதாவது ஆண்கள் ஐயோ பெண்களால் எங்களுக்கு துன்பம் என்றும் பெண்ணாதிக்கம் , ஆண் விடுதலை என்றும் கோஷம் போட்டுக்கொண்டு அலைகிறர்களா? இல்லையே ...! அப்படியிருக்க, உங்களுக்கு மட்டும் ஏன் எந்த கொலை வெறி? ( வடிவேல் பாணியில் வாசிக்கவும்).
ஒரு மனிதப் பிராணி... அது ஆணோ பெண்ணோ இருவருக்கும் எதிர்ப்பாலால் மட்டுமல்ல எந்த உலகத்தின் பல காரணிகளால் பல்வேறு துன்பங்கள் வரத்தான் செய்கின்றன. நம் தேவைகளை நிறைவேற்ற முயலும் போது அருமையான வளங்களை கொண்ட இந்த பஞ்ச பூமியில் துன்பப்பட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காக சும்மா... சும்மா...ஆண்கள் வில்லன்கள் ...நாங்கள் எல்லாம் உத்தம பத்தினிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதிர்கள். உங்களிலும் 'நீலாம்பரிகள்' இருக்கத்தான் செய்கிறீர்கள். சொல்லப் போனால் தப்பு செய்யாத மனித பிறவி யாருமே இல்லை.


எப்போதாவது ஒரு குறிப்பிட்ட பெண் உங்களுக்கு அநியாயம் செய்தால் பெண் குலமே இப்படித்தான் என்று எழுந்து போராடியிருக்கிறீர்களா? ...இல்லைத்தானே...?!
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆண் உங்களுக்கு எதிராக குற்றம் செய்கிறான்...அநியாயம் செய்கிறான் என்றால் அவனுக்கு எதிராக மட்டுமே வேலை செய்யுங்கள். தைரியத்துடன் தட்டிக் கேளுங்கள். அதை விட்டு விட்டு ஆண்களே இப்படித்தான் என்று அழகழகான வரிகளில் கட்டுரை எழுதாதீர்கள். ...உங்கள் அப்பாவும் அண்ணாவும் பாவம் அல்லவா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?!

Wednesday, April 9, 2008

உங்கள் சிந்தனைக்கு...!

ஏமாந்தால் தப்பா?
ஒருவன் யாரிடமாவது ஏமாந்து விட்டால் ஏமாந்தவனை ஏமாளி, முட்டாள் என கேவலமாகவும் ஏமாத்தியவனைஅவன் புத்திசாலி எனவும் பாராட்டுவது நமது வாடிக்கையாக போய் விட்டது. ஒருவன் அப்பாவியாக அதாவது நல்லவனாக இருப்பது தப்பா?

உலக அழகி


உலகுக்கு ஐஸ்வர்யா ராய் ...உனக்கு உன் காதலி....அப்படித்தான் சொல்ல வேண்டும்...நீ ஒரு காதலனாக இருந்தால் அல்லது ஒரு காதலனாக தொடர்ந்து இருக்க விரும்பினால் ...!
ஆனால் அழகு என்பதை நாம் சில விதிகளினால் அளவிட்டுவிட முடியாது. இடுப்பு இந்தளவுதான் இருக்க வேண்டும் ...இப்படித்தான் நடக்க வேண்டும்...என்பதெல்லாம் ஒரு இயந்திர அளவுகோல்கள். அழகிகளை தேர்வு செய்யும் நீதிபதிகளுக்கு கூட அவர்களை முழுமையாக பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான்...!

Thursday, April 3, 2008

நான் யார்?


நிச்சயம் நமது பெயர் அல்ல...வேண்டாம்...இதுக்காக பெரும் தத்துவவாதிகளிடம் அலைய வேண்டாம். நெஞ்சை அறையும் உண்மை விடை...தீனி கொடுக்க கொடுக்க பசித்துக்கொண்டே இருக்கும் இரு உறுப்புக்களை கொண்ட சாதாரண மனிதப் பிராணி...

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?